ஒரு த்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றவுள்ள ‘கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041’ஐ வெளியிட்டுள்ளோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

#1TrillionDollar பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம்.

அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம்.

எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான – சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.