தமிழகத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தைச் சேர்ந்த பெண்களை பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், திருச்சி, பெரம்பலூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு கிட்னி விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சட்ட விரோத கிட்னி விற்பனையை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், இதனைக் கண்காணிக்க திமுக அரசு தவறிவிட்டது. எனவே, முதல்வர் ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, சட்ட விரோத கிட்னி விற்பனையை தடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
