நெல்லையில் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை சம்பவத்தில் அவரத் தோழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது தாய் தந்தைக்கு தண்டனை வழங்குவது தவறு.. என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது, அவர்களை விட்டுவிடுங்கள்.. கவினுக்கும் எனக்கும் என்ன மாதிரியான உறவு என்று எங்களுக்கு மட்டுமே தெரியும்.. உண்மை தெரியாமல் இதைப்பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம் என்று கவினின் தோழி சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லையில் தூத்துக்குடி ஐடி என்ஜினீயர் கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர், தனது சகோதரியிடம் பேசி வந்ததால், ஆத்திரமடைந்த சுர்ஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்தார். இந்த வழக்கில் சுர்ஜித் சரணடைந்தார். இதையடுத்து அவர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டது. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கபப்பட்டது. தொடர்ந்து பெண்ணின் தந்தை சரவணன் கைது செயப்பட்டார்.
இந்த நிலையில் தான் கவினின் தோழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுபாஷினி அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-
நான் தான் சுபாஷினி.. எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்று, எனக்கும் அவனுக்கும் மட்டும் தான் தெரியும்.. என்னை பற்றியோ, எங்க இரண்டு பேரை பற்றியோ யாரும் எதுவும் தப்பா பேச வேண்டாம்.. யாருக்கும் எதுவும் தெரியாது.. உண்மை தெரியாம எல்லாரும் நிறையா பேச வேண்டாம்.. எங்க அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எதுவுமே தெரியாது.. அவங்களை விட்டுங்க.. எங்க அப்பா அம்மாவை தண்டிக்க நினைப்பது தவறு.. இந்த ஒரு நிலைமையில், எல்லாருக்கும் என்ன தோன்றியதோ அதையெல்லாம் பேசிவிட்டீங்க.. நான் என்ன நினைகிறேன் என்பதை மதித்து ஒரே ஒரு பொண்ணு மட்டும் என்ன பத்தி பேசியிருக்காங்க.. அவங்களுக்கு ரொம்ப நன்றி.. இவ்வாறு அந்த பெண் வீடியோவில் கூறியுள்ளார்.
