பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு: மேல்முறையீடு செய்கிறது ராமதாஸ் தரப்பு!

நீதிப​தி​யின் அழைப்பை ஏற்று பாமக தலை​வர் அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரானார். கட்​சி​யின் நிறுவனர் ராம​தாஸ் காணொலி மூலம் ஆஜரா​னார். இரு​வரிட​மும் தனது சேம்​பரில் வைத்து பேச்சுவார்த்தை நடத்​திய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசா​ரித்து பொதுக்​குழு​வுக்கு தடை விதிக்க மறுத்து ராமதாஸ் தரப்பு மனுவை தள்​ளு​படி செய்​தார். இதை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக ராம​தாஸ் தரப்​பில் அறிவிக்கப்பட்​டுள்​ளது.

ராம​தாஸ், அன்​புமணிக்கு இடையே​யான கருத்து வேறு​பாடு நாளுக்​கு​நாள் அதி​கரித்து தனித்​தனி​யாக செயல்​பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில் மாமல்​லபுரத்​தில் ஆக.9-ம் தேதி​யான இன்று பொதுக்​குழு கூட்​டம் நடத்த அன்​புமணி அழைப்பு விடுத்​தார். இதற்கு தடை கோரி ராம​தாஸ் ஆதரவு பொதுச் செய​லா​ள​ரான முரளிசங்​கர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று நடந்​தது. அப்​போது ராம​தாஸ் தரப்​பில் வழக்​கறிஞர் அருள், வி.எஸ்​. கோபு ஆகியோ​ரும், அன்​புமணி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் என்​.எல்​.​ராஜா மற்​றும் கே.​பாலு ஆகியோ​ரும் ஆஜராகி வாதிட்​டனர். அப்​போது கருத்து தெரி​வித்த நீதிப​தி, இந்த வழக்​கில் தன்​னால் 10 நிமிடங்​களில் முடிவு எடுத்​து​விட முடி​யும் என்​றாலும், இரு​வரது நலன் கரு​தி​யும் அவர்​களு​டன் நேரில் பேச விரும்​பு​கிறேன். எனவே ராம​தாஸும் அன்​புமணி​யும் மாலை 5.30 மணிக்கு தனது சேம்பருக்கு வரு​மாறு அழைப்பு விடுத்தார்.

அதன்​படி அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் நேற்று நீதிபதி சேம்​பரில் ஆஜரா​னார். உடல்​நிலை காரண​மாக ராம​தாஸ் காணொலி மூலம் ஆஜரா​னார். இரு​வரிட​மும் சுமார் 30 நிமிடங்​ளுக்​கும் மேலாக நீதிபதி பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். பின்​னர் பாமக பொதுக்​குழு​வுக்கு தடை கோரும் வழக்கின் விசா​ரணை நேற்​றிரவு நீதிபதி சேம்​பரில் மீண்​டும் நடந்​தது. அரசு தரப்​பில் கூடுதல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர். முனியப்​ப​ராஜ் ஆஜரா​னார்.

அதன்​பிறகு நேற்​றிரவு நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில், “அன்​புமணி ஆக.9 (இன்​று) நடத்​தும் பொதுக்​குழு​வுக்கு தடை விதிக்க முடியாது” எனக்​கூறி ராம​தாஸ் தரப்பு மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார். மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக சிவில் நீதி மன்​றத்தை நாட​வும் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இந்த உத்​தரவை எதிர்த்து ராம​தாஸ் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் உடனடி​யாக மேல்​முறை​யீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி பாமக பொதுக் குழுவை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது , நீதிக்கும் அறத்துக்கும் கிடைத்த வெற்றி” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (ஆக.9) காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்துக்கும் கிடைத்த வெற்றி.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே” என்று பாமகவினருக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.