தமிழ்நாட்டில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என அறிவிப்பு.
கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் – கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவிப்பு.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், தற்போது நகைக்கடன் தொடர்பாக அதிரடி அறிவிப்புகளை கூட்டுறவுத்துறை பதிவாளர் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி தள்ளுபடி நிராகரிக்கப்பட்ட காரணங்கள் பின்வருமாறு :
- ஏற்கனவே 2021ஆம் ஆண்டு பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் அவரது குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் இடம்பெற்றிந்தால் நிராகரிக்கப்படும்.
- நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்கள் அளித்த மனு நிராகரிக்கப்படும்.
- 40 கிராமுக்கு மேற்பட்டு நகையை கடனாக பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி நிராகரிக்கப்படும்.
- 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக் கடன் பெற்ற நபருக்கு தள்ளுபடி நிராகரிக்கப்படும்.
- கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தள்ளுபடி கிடையாது.
- கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தள்ளுபடி கிடையாது.
- அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தள்ளுபடி கிடையாது.
- குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது
- நியாய விலை கடைகளில் எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினருக்கு தள்ளுபடி கிடையாது.
- ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக் கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமக்கும் கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு தள்ளுபடி கிடையாது.