ஜார்கண்ட் மாநிலத்தில் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலையில் ரோப் கார்கள் ஒன்றொரு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலையில் பாபா பைடியநாத் மலைக்கோயில் உள்ளது. இங்கு தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற மீட்புப் படையினர், ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து திரிகுட் மலையில் அமைந்துள்ள பாபா பைடியநாத் கோயிலுக்குப் பக்தர்கள் சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 18 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ரோப்காரில் 12 கேபின்களில் குறைந்தது 48 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியுடன் மீட்புப் பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்பி சுபாஷ் சந்திரா மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகிறார். என்ன காரணம் இந்த விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேபிள் கார்கள் மோதியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். முழு விசாரணை நடத்தும் போது விபத்திற்கான காரணம் தெரிய வரும். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடன் அக்கிராம மக்களும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து துணை கமிஷனர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறுகையில், ” நிலைமை இப்போது முழுவதுமாக கட்டுக்குள் இருக்கிறது. சிலர் ரோப்கார் கேபின்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளனர்” என்றார்.