விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு: அண்ணாமலை

அதிவிரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு நடந்து ஆட்சி அகற்றப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் காளிமலையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

யாரோ வந்து அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க ஆண்டவர் விரும்பவில்லை. கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் நம்மை தயார்ப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆன்மா சுத்தப்படுத்தபட்டு கொண்டு அந்த பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். நாம் தயார் நிலையில் இருக்கும் போது ஆண்டவன் கட்டளையிடுவான். அப்போது மிக விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும். அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அகற்றப்படும். நம் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.