மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்: பாக்கியராஜ்

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

“பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022” எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில் பிரதமர் மோடியை குறை சொல்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார்.

மோடியை விமர்சனங்கள் செய்பவர்கள் 3 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதை சொல்கிறேன் என்றால் 3 மாத குழந்தைக்குத்தான் வாய், காது இருக்காது என்று தெரிவித்திருந்தார்.