மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மத்தியப் பிரதேச அரசின் முன்னேற்றம் மற்றும் முயற்சிகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்தேன். அவர் மாநில அரசாங்கத்தின் நல்ல நிர்வாக முயற்சிகள் மற்றும் அவர்களின் திட்டங்கள் எவ்வாறு மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருகின்றன என்று விவாதித்தார். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த சந்திப்பின்போது நக்சல் பிரச்சினை தவிர சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள், கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம் மற்றும் பல விஷயங்களும் அவர்களின் விவாதத்தில் இடம் பெற்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.