சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா என்பவர்களை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும் இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு கொண்டிருக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோவையை சேர்ந்த பெண் ஒருவர், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீஸார் சூர்யா, சிக்கந்தர்ஷா மீது வழக்குப் பதிந்தனர். தனிப்படை போலீஸார், மதுரையில் இருந்த சூர்யா, சிக்கந்தர்ஷா ஆகிய இருவரையும் இன்று கைது செய்து, அவர்களிடமிருந்து மூன்று செல்போன்களை ஆய்வுக்காக கைப்பற்றியும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்கள் சமூக வலைதளங்களில் சமூகத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனால் சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடும் என்பதால் இவர்களது YouTube channelகளை முடக்குவதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்று சமூக வலைதளத்தில் சமூக நலனையும் இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களை பதிவிடுவோரின் சேனல்கள் முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.