சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஜனவரி 31ம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இன்று மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
- ஜனவரி 14 முதல் 18 வரை வழிபாட்டுத் தலங்கள் பொது வழிபாட்டிற்காக மூடப்படும்.
- ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
- ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
- பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் நலன் கருதி 75 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து கொள்ளலாம்.
- நடைமுறையில் உள்ள மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.