ஓமிக்ரான் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மிக அதிகமாகத் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபின், பரவலில் வேகமெடுத்துள்ளது.
- உலகம் முழுவதும் ஓமிக்ரான் பரவல் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளது.
- டெல்டா வைரசை விட ஒமிக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு
- அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஓமிக்ரான் பரவல் தீவிரம்.
- அமெரிக்காவில் ஒரே நாளில் 3,05,796 பேர் கொரோனாவால் பாதிப்பு.
- பிரிட்டனில் ஒரே நாளில் 1,29,471 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.
- பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் புதிய உச்சம் 1,79,807 பேர் பாதிப்பு.
ஒமிக்ரான் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 6,496 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மொத்தம் 54,30,287 பேர் உயிரிழந்துள்ளனர்.