பேட்டி Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/health/interviews/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Wed, 29 Dec 2021 01:45:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 பேட்டி Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/health/interviews/ 32 32 201197430 பால்வினை நோய்கள் – டாக்டர். ரேவதி கிருஷ்ணன் https://koodal.com/health/interviews/2021/12/29/sexually-transmitted-diseases-doctors-advice/ Wed, 29 Dec 2021 01:45:30 +0000 https://koodal.com/?p=151 ஆண் பெண் இருபாலரும் பருவ வயதில் இன உணர்வு கொள்வதும் திருமணம் செய்து கொள்வதும் திருமணம் செய்து கொள்வதும் இயற்கை நிகழ்வுகளேயாகும். இவற்றைப் பற்றி ஆண்களும் பெண்களும் வெட்கப்படவோ அருவருப்பு அடையவோ ஏதும் இல்லை. இன உணர்ச்சி மேலோங்கி நின்று திருமணம்…

The post பால்வினை நோய்கள் – டாக்டர். ரேவதி கிருஷ்ணன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஆண் பெண் இருபாலரும் பருவ வயதில் இன உணர்வு கொள்வதும் திருமணம் செய்து கொள்வதும் திருமணம் செய்து கொள்வதும் இயற்கை நிகழ்வுகளேயாகும். இவற்றைப் பற்றி ஆண்களும் பெண்களும் வெட்கப்படவோ அருவருப்பு அடையவோ ஏதும் இல்லை.

இன உணர்ச்சி மேலோங்கி நின்று திருமணம் புரிய இயலாத நிலையில் சில சமயம் ஆண் பெண் இருபாலாரும் சட்டத்திற்கும் சமுதாய நியதிகளுக்கும் புறம்பான மறைமுக வாழ்வின் ஈடுபடுவதுண்டு திருமணமல்லாத ஒழுக்கமற்ற முறையை ஏற்படுத்திக் கொள்ளும் பாலுறவும் மிகவும் தவறாக முடிகின்றன.

பெண்ணானவள் தவறான வாழக்கையின் முடிவில் சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கத் துணிவில்லாத இழிவான நிலையை அடைகின்றாள். தந்தையின் பெயரை அறிவிக்க இயலாத குழந்தைக்குத் தாயாகி பலவித துன்பங்களையும் அவள் அடைகிறாள்.

ஆனால் ஆண்மகன் பெண்களைப் போன்று இத்தகைய நிலைகளை அடையாது தப்பி விடுகிறான். எனினும் இந்த முறையற்ற வாழ்க்கை ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு சோகச் சூழ் நிலைகளைச் சந்திக்கிறார்கள்.

பால்வினை நோய்கள் பெண்களால் மட்டுமே பரவுகின்றன என்ற தவறான கருத்து நிலவுகிறது. பால்வினை நோய்கள் ஆண். பெண் இருபாலாரையும் பீடிக்கின்றது உடலுறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும். பெண்ணிடமிருந்து ஆணுக்கும் இவை பரவும்.

பால்வினை நோய்கள் கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய நோய்க் கிருமிகளால் ஏற்படுகின்றன. ஒவ்வொரு வகை நோய்க்கும் ஒவ்வொரு வகை விஷக்கிருமி காரணமாக உள்ளது டைஃபாய்டு, அம்மை போன்ற நோய்களைப்போல், பால்வினை நோய்களும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றிக் கொள்ளும் இயல்புடையன.

டைஃபாய்டு, அம்மை போன்ற தொற்று நோய்கள் காற்று உணவு போன்றவற்றின் மூலம் பரவி அதன்மூலம் நோயாளிகளிடமிருந்து ஆரோக்கியமானவர்களைப் பீடிக்கின்றன. ஆனால் பால்வினை நோய்க் கிருமிகள் ஆணும் பெண்ணும் ஒன்று கூடி உடலுறவு கொள்வது ஒன்றினால் மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகின்றன. எனவேதான் ஒழுக்கமுறை பலவீனம் அடையும் பொழுதும். விபச்சாரம் சமூகத்தில் மேலோங்கி நிற்கும் பொழுதும் பால்வினை நோய்கள் பிளேக் அம்மை போன்ற பெருவாரியான நோய்கள் மக்களிடையே வேகமாகப் பரவத் தொடங்குகின்றன.

விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் ஒரு சமயம் இல்லாவிடில் மற்றொரு சமயம் பால்வினை நோய்களால் கட்டாயம் பீடிக்கப்படுவாள் என்பது நிச்சயிக்கப்பட்ட உண்மை.

ஆரோக்கியமான வாலிபன் ஒருவன் விபசாரப் பெண்ணுடன் பாலுறவு கொண்டால் ஒரே சமயத்தில் மூன்று வகையான பால்வினை நோய்களுக்கு அவன் இலக்காகிறான்.

இந்த மூன்று நோய்களையும் அவன் மீண்டும் வேறொரு விபசாரப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது அந்தப் பெண்ணுக்கு திரும்பக் கொடுக்கலாம். அவள் அதை பிறகு வேறோருவருக்குப் பரப்பக் கூடும். இவ்வாறு விபசாரத்தின் மூலம் பால்வினை நோய்கள் பரவி சமுதாயத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன.

ஒழுக்கம் கெட்ட ஒர் ஆண் அல்லது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று உறுதி செய்யப்பட்ட இப்பால்வினை நோய் குடும்பப் பெண்ணையும் தொற்றுவதுண்டு. கணவன் ஒரு விபசாரப் பெண்ணுடன் தொடர்பு கொள்வதால் நோயால் பீடிக்கப் பட்டு அதை ஏதுமறியாத தன் மனைவியின் உடலிலும் சேர்த்துவிடும் கொடுமை. குடும்பப் பெண்கள் பலரின் வாழ்வில் பல பிரசனைகளைத் தோற்றுவிக்கின்றன.

தன் நோயை வெளியே சொல்ல முடியாமலும். சிகிச்சை மேற்கொள்ளத் துணிச்சல் இல்லாமலும் தவிக்கும் தவிப்பு மிகவும் பரிதாபகரமானதாகும்.

கணவனின் தவறான நடத்தையினால் மனைவியும் பாதிக்கப்படுவதோடு மட்டும் நிற்பதில்லை. நோய் முற்றினால் பிறக்கும் குழந்தைகளையும் அதிக அளவில் பாதித்த விடக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. எனவே ஒழுக்கம் பற்றிய நினைவு மக்களிடையே அதிகமாக வாழ்க்கை நிலை சீர்திருத்தம் பெற வேண்டும் விபசாரம் அறவே ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப நலனை முன்னிட்டு ஆண்களும் விபசாரப் பெண்களுடனான தொடர்புகளை அறவே விலக்க வேண்டும்.

The post பால்வினை நோய்கள் – டாக்டர். ரேவதி கிருஷ்ணன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
151
முதுகு வலிக்கு மூளைதான் காரணம் – டாக்டர். சேகர் https://koodal.com/health/interviews/2021/12/29/common-tips-for-back-pain/ Wed, 29 Dec 2021 01:43:51 +0000 https://koodal.com/?p=149 தீராத முதுகு வலிக்கு மூளை தான் காரணம் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எந்த பிரச்சினைக்கும் காரணகர்த்தாவை மூளை என்பார்கள். மனிதர்களுக்கு ஏற்படும் முதுகுவலி பிரச்சினை மூளையுடன் முடிச்சு போட்டு இருப்பது ஆராய்ச்சி மூலம் தெரியவந்து உள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய…

The post முதுகு வலிக்கு மூளைதான் காரணம் – டாக்டர். சேகர் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தீராத முதுகு வலிக்கு மூளை தான் காரணம் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

எந்த பிரச்சினைக்கும் காரணகர்த்தாவை மூளை என்பார்கள். மனிதர்களுக்கு ஏற்படும் முதுகுவலி பிரச்சினை மூளையுடன் முடிச்சு போட்டு இருப்பது ஆராய்ச்சி மூலம் தெரியவந்து உள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் முதுகுவலி ஏற்படுவதற்கு மூல காரணம் மூளை தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவெ முதுகு வலி தீர வேண்டும் என்றால் மூளைக்கு ஓய்வு கொடுங்கள்.

முதுகுவலி ஏற்பட காரணம் என்ன?

முதுகுவலிக்கு அடிப்படைக் காரணம், நீண்ட நேரம் இயற்கைக்கு மாறான நிலையில் உட்கார்ந்து அல்லது படுத்திருப்பதால் முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தம்மாகும். முதுகு வலி உங்கள் கீழ் முதுகில் மந்தமான வலிகள், குத்தும் வலி, உங்கள் கழுத்தில் விறைப்பு மற்றும் உங்கள் கால்கள் மற்றும் கால்களில் உணர்வின்மை போன்ற வடிவங்களில் ஏற்படலாம்.

The post முதுகு வலிக்கு மூளைதான் காரணம் – டாக்டர். சேகர் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
149
கஞ்சா புகைத்தால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் – டாக்டர். லானி பர்க்மென் https://koodal.com/health/interviews/2021/12/29/health-care-dr-interview-ganja-kills-your-sperm/ Wed, 29 Dec 2021 01:37:00 +0000 https://koodal.com/?p=147 கஞ்சா புகைக்கும் ஆண்களால் கருத்தரிக்க வைக்க முடியாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். டாக்டர் லானி பர்க்மென் என்பவர் தலைமையிலான குழுவினர் கஞ்சா புகைக்கும் ஆண்களின் விந்தணுக்கள் நீந்திச் செல்லும் திறன் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடத்தினர். கஞ்சா…

The post கஞ்சா புகைத்தால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் – டாக்டர். லானி பர்க்மென் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கஞ்சா புகைக்கும் ஆண்களால் கருத்தரிக்க வைக்க முடியாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். டாக்டர் லானி பர்க்மென் என்பவர் தலைமையிலான குழுவினர் கஞ்சா புகைக்கும் ஆண்களின் விந்தணுக்கள் நீந்திச் செல்லும் திறன் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடத்தினர்.

கஞ்சா புகைக்கும் ஆண்களின் விந்தணுக்கள் கண்மூடித் தனமான அதிவேக நீந்தும் திறன் கொண்டவைகளாக இருக்கின்றன. ஆனால் கருமுட்டைகளுடன் இணைந்து கருவுறுவதற்கு இந்த அதிவேகம் அனாவசியமானது. அதே நேரம் விந்தணுக்கள் ஸ்டாமினாவை இழந்து விடுகின்றன. மேலும் இத்தகைய விந்தணுக்கள் கருமுட்டைகளை நெருங்குவதற்கு முன்பாகவே எரிந்து போகின்றன. இதனால் கருத்தரிக்க முடியாமல் போகிறது.

கஞ்சா புகைப்பதால் உடலில் இயற்கையான சுழற்சி தன்மை மாறி விடுகிறது. கஞ்சாவில் உள்ள டிஎச்சி என்ற பொருள் தான் விந்தணுக் களின் கண்மூடித்தனமான இயக்கத்துக்கு காரணம். அதுபோல விந்தணுவில் உள்ள என்சைம் இடைவெளியை இந்த பொருள் சிதைத்து விடுகிறது. அதனால் கருமுட்டையை அடைவதற்கு முன்பாகவே விந்தணுக்கள் செயலிழந்து விடுகின்றன.

ஏற்கனவே கஞ்சா புகைக்கும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல கஞ்சா புகைப்பதை நிறுத்தினாலும் கூட மேற்சொன்ன டிஎச்சி பொருள் உடலில் இருக்கும் கொழுப்புகளில் ஒளிந்து கொண்டு நீண்ட காலத்துக்கு தொல்லை கொடுக்கும். அதன் தாக்கம் குறைய நிறைய நாட்கள் பிடிக்கும். ஆகையால் கருவுற விரும்பும் ஆண்களும், பெண்களும் கஞ்சா புகைக்காமல் இருப்பதே சிறந்தது.

The post கஞ்சா புகைத்தால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் – டாக்டர். லானி பர்க்மென் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
147
நா(வாய்) காக்க – பி. பாலாஜி கண்ணன் https://koodal.com/health/interviews/2021/12/29/siddha-medicine-mouth-cancer/ Wed, 29 Dec 2021 01:35:19 +0000 https://koodal.com/?p=145 மனித உடலின் ஆரோக்கியத்தை சித்த மருத்துவம் கண், காது, மூக்கு, நா (வாய்), மெய் (தோல்), மலம், சிறுநீர், சுக்கிலம் (ஆண்), சுரோணிதம் (பெண்களுக்கு) ஆகிய எண்வகைத் தேர்வின் மூலம் கணிக்கிறது. இன்றைக்கும், எவ்வளவு பெரிய மருத்துவராயினும், நோயாளியின் குறைகளைக் கேட்டுவிட்டு,…

The post நா(வாய்) காக்க – பி. பாலாஜி கண்ணன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மனித உடலின் ஆரோக்கியத்தை சித்த மருத்துவம் கண், காது, மூக்கு, நா (வாய்), மெய் (தோல்), மலம், சிறுநீர், சுக்கிலம் (ஆண்), சுரோணிதம் (பெண்களுக்கு) ஆகிய எண்வகைத் தேர்வின் மூலம் கணிக்கிறது. இன்றைக்கும், எவ்வளவு பெரிய மருத்துவராயினும், நோயாளியின் குறைகளைக் கேட்டுவிட்டு, முதல் பரிசோதிப்பது வாயைத்தான்.

வாயினுள் அடங்கியுள்ள நாவின் நிறம், பற்களின், ஈறுகளின் ஆரோக்கியம், உமிழ்நீரின் தன்மை, சுரக்கும் அளவு, வாய்ப்புண், வாய்த் துர்நாற்றம் முதலியவற்றைக் கொண்டு ரத்தசோகை முதல் புற்றுநோய் வரை மருத்துவர்கள் நோய்களைக் கணிக்கிறார்கள்.

மனித உடலின் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது உணவு. அவ்வுணவை நாம் விரும்பும் வண்ணம் செய்வது சுவை. அச்சுவையை நமக்கு உணர்த்துவது நாவிலுள்ள சுவை மொட்டுகளே ஆகும். மேலும், அவ்வுணவானது நன்கு சீரணமாக, அவற்றை நன்றாக அரைக்கும் பற்கள், உணவின் செரிமானத்தை ஆரம்பித்து வைக்கும் உமிழ்நீர் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ள வாயின் ஆரோக்கியமே உணவின் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் ஆகும்.

உணவுச் செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் போது தான் உண்ட உணவின் சாரமானது (சத்தானது) உடலில் உள்ள திசுக்களால் முழுமையாகக் கிரகிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் தகுந்த சக்தியைப் பெறுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், இன்றைய நவீன, அவசர வாழ்க்கையில் நாவும், வாயும் நம்மிடம் மாட்டிக் கொண்டு மிகுந்த அவஸ்தைப்படுகின்றன. உலகிலேயே இந்தியாவில் தான் வாய்ப்புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகின்றன. நாவிலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

இவற்றுக்கு முக்கியக் காரணம், நம் மக்களிடையே காணப்படும் புகையிலை உபயோகம் தான். புகையிலையை அப்படியே சுவைத்தல்; சிகரெட், பீடி, பான்மசாலா உபயோகித்தல்; எப்போதும் அதிகச் சூடாகவே உணவருந்துதல்; சூடான பானங்கள் குடித்தல்; செயற்கை நிறங்கள் மற்றும் சுவைக்காக செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட துரித உணவு வகைகள்; சுவைக்காகப் பதத்தை மீறி வறுத்து செய்யப்படும் மிகு கார, மசாலா, அசைவ உணவு வகைகள்; அகால உணவு போன்ற ஒழுங்கற்ற உணவு முறைகள் வாய்ப்புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன.

நார்ச்சத்து நிறைந்த காய்கறி, கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்தக் காலகட்டங்களில் கிடைக்கும் காய்கறி, பழங்களை அதிகமாகவே உபயோகிக்க வேண்டும்.

உணவுமுறையில் சீரான ஒழுங்கினைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில், சரியான கால இடைவெளியில் உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உடல் இயக்க மாறுபாடுகளைச் சீர்செய்து புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய திரிதோட சமனப் பொருள்களான மஞ்சள், சீரகம், வெந்தயம் போன்றவற்றை, சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கரிசாலை, கீழாநெல்லி, கடுக்காய் போன்ற கற்ப மூலிகைகளின் மூலம் செரிமான மண்டலத்தின் சுரப்புகளைச் சீர்செய்து புற்றுநோய் உண்டாகக்கூடிய வாய்ப்புகளை குறைக்கலாம்.

வாரத்துக்கு ஒரு முறை திரவ உணவுகளான பாசிப்பருப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி, நீர்மோர், பழரசம் போன்றவற்றை மட்டும் அருந்துவதால் செரிமான மண்டல உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அந்த ஓய்வில் அவை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றன.

மேலும், வழிவழியாக வரும் நமது இந்தியக் கலாசார உணவுமுறைகளைக் கைக்கொள்வதன் மூலமும் வாய்ப்புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

The post நா(வாய்) காக்க – பி. பாலாஜி கண்ணன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
145
டான்சிலில் லேசர் மூலமாக ஆபரேஷன் – டாக்டர். இந்திரா கைலாசம் https://koodal.com/health/interviews/2021/12/29/tonsils-treatment-through-laser-operation/ Wed, 29 Dec 2021 01:29:00 +0000 https://koodal.com/?p=143 டான்சிலில் லேசர் மூலமாக ஆபரேஷன் செய்ய முடியுமா? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? டான்சில் பிரச்சினையை லேசரால் சரி பண்ண முடியும். டான்சிலில் சீழ், கிருமிகள், வெளிப் பகுதியில் அதிகமாக இருக்கும். இதனால் டான்சிலை முழுமையாக, வெளியில் எடுக்காமல் சீழ், கிருமிகள்…

The post டான்சிலில் லேசர் மூலமாக ஆபரேஷன் – டாக்டர். இந்திரா கைலாசம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
டான்சிலில் லேசர் மூலமாக ஆபரேஷன் செய்ய முடியுமா? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

டான்சில் பிரச்சினையை லேசரால் சரி பண்ண முடியும். டான்சிலில் சீழ், கிருமிகள், வெளிப் பகுதியில் அதிகமாக இருக்கும். இதனால் டான்சிலை முழுமையாக, வெளியில் எடுக்காமல் சீழ், கிருமிகள் இருக்கிற வெளிப் பகுதிகளில் மட்டும் லேசர் வைத்து எடுக்க முடியும்.

இதனை லேசர் டான்சில் ஆபரேஷன் என்பார்கள். இதனால் நிறைய நன்மைகள் உள்ளன. ஒரு சொட்டு ரத்தம் கூட வீணாகாது. சாதாரண ஆபரேஷனில் ஏற்படும் வலியில் 10 மடங்கு குறைவானதாகவும், இருக்கும்.

லேசரால் ஏற்படும் புண் சீக்கிரமாக ஆறிவிடும். ஆபரேஷன் செய்த மணி நேரத்தில் நோயாளி திரும்பவும் தனது வேலைக்கு போக முடியும்.

என்டோஸ்கோப், மைக்ரோஸ்கோப் இல்லாமல், எந்த மாதிரியான சூழ்நிலையில் லேசர் மட்டுமே பயன்படுத்தி காது, மூக்கு தொண்டையில் ஆபரேஷன் செய்ய முடியும்?

தைராய்டு, பெரோடிட் மற்றும் கழுத்து கேன்சர் போன்ற நோயாளிகளுக்கு லேசர் பயன்படுத்தி ஆபரேஷன் செய்வதால் ரத்தம் கொஞ்சம் கூட வெளியே வராது. இது தைராய்டு, பெரோடிட்டுக்குள் இருக்கிற நோயை மொத்தமாக எடுப்பதற்கு வசதியாக இருக்கும். தைராய்டு, பெரோடிட்டுக்குள் இருக்கிற முக்கியமான நரம்புகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் நரம்பை பாதுகாக்க முடியும்.

கர்ப்பபை கட்டிகளை கண்டறிவது எப்படி?

மாதவிடாய் ஏற்படும் பொழுது மேலே கூறிய ஏதேனும் அறிகுறிகள் உண்டாகுமேயானால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தால் எந்த வகை பிரச்சினை இருந்தாலும் கண்டறியலாம். கட்டிகள் எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிந்து கொண்டு இதற்கான சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தை பெறும் வயதில் கட்டிகள் வந்தால் அதை இடம் அறிந்து வீடியோ லேப்ராஸ்கோப்பி மூலமாக மூலமாக எளிதில் அகற்றி விடலாம்.

குழந்தைகள் பெற்றபின் உண்டாகும் கர்ப்பபை கட்டிகளை வீடியோலேப்ராஸ்கோப்பி மூலம் கர்ப்பபையையோ அல்லது கட்டிகளையோ எளிதில் அகற்றி விடலாம். லேசர் முறையை உபயோகித்தும் துல்லியமாக அகற்றிவிடலாம்.

மைக்ரோஸ்கோப்பிக் ஆபரேஷனில் லேசர் பயன்படுத்த முடியுமா?

மைக்ரோஸ் கோப்பிக் மூலமாக காதில் பண்ணுகிற ஆபரேஷனில் பயன்படுத்த முடியும். காது கேட்காமல் இருக்கிற நோயாளிகளுக்கு ஸ்டெபி டெக்டமி ஆபரேஷன் செய்யும் போது நடுக்காதுக்கும், உள்காதுக்கும் நடுவில் இருக்கிற ஸ்டேபீஸ் எலும்பில் 0.6 எம்.எம். அளவில் துளையிட்டு, உள் காதில் டெப்லான் பிஸ்டனை பொருத்த வேண்டும்.

இதனை லேசர் மூலமாக ரொம்ப துல்லியமாக செய்ய முடியும். காதில் சீழ் வருகிற நோயாளிகளுக்கு காது எலும்பின் (மாஸ்டாய்டு) உள்ளே இருக்கிற சதை, சீழ் போன்றவற்றை லேசர் மூலமாக குணப்படுத்த முடியும். இந்த ஆபரேஷன் மைக்ரோஸ் கோப் மூலமாக லேசர் பயன்படுத்திக் கொள்வதால் சுற்றி உள்ள முக்கியமான பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

குரல் நாணின் மேல் உள்ள கட்டியை மைக்ரோஸ் கோப் மூலமாக பார்த்து லேசர் பயன்படுத்தி கரைக்க முடியும்

சைனஸ் நோய்களுக்கு என்டோஸ் கோப்பிக்-சைனஸ் சர்ஜரி செய்யும் போது லேசர் பயன்படுத்த முடியுமா?

சாதாரண என்டோஸ்கோப்பிக் சைனஸ் ஆபரேஷனில் சைனசின் உள் பகுதியில் சீழ் அல்லது சதை இருந்தால் அதற்கு காரணமான நோயை என்டோஸ்கோப் வழியாக கண்டுபிடித்து அந்த நோய்க்கான அடிப்படை பிரச்சினையை சரி செய்வதால் சைனஸ் பிரச்சினையை குணப்படுத்த முடியும்.

மூக்கினுள் சதை, பாலிப் இருந்தால் காதுக்கும், மூக்குக்கும் இடையில் உள்ள சைனஸ் துவாரத்தை அடைத்து விடும். இந்த மாதிரியான சதையை எடுப்பதற்கு டீ-பிரைடர் என்ற நவீன கருவியை பயன் படுத்துகிறோம். இந்த மாதிரி பிரச்சினைகளை கூட லேசர் வைத்து கரைக்கலாம். லேசர் வைத்து கரைப்பதால் இந்த நோயை எளிதில் சரி பண்ண முடியும்.

சில நோயாளிகளுக்கு மூக்கின் நடுப்பகுதி வளைந்து இருப்பதால் அல்லது எலும்பின் அளவு அதிகமாக இருப்பதால், மூக்கில் உள்ள சுவாச துவாரம், சைனஸ் துவாரம் அடை படுவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் ஏற்படும் சைனஸ் நோயை குணப்படுத்த மூக்கின் நடுப்பகுதி எலும்பை சரிசெய்ய வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு லேசர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது ரத்தம் அதிகமாக வந்தால் லேசர் பயன்படுத்தி ரத்தம் வெளிவருவதை தடுக்க முடியும்.

காது, மூக்கு, தொண்டையில் உள்ள எந்தெந்த பிரச்சினைகளுக்கு என்டோஸ் கோப் பயன்படுத்தி லேசர் மூலமாக சிகிச்சை அளிக்க முடியும்?

முக்கியமாக குரல் வளையில் உள்ள குரல் நாண்களின் மேல்கட்டி அல்லது வீக்கம் வருவதால் சில பாடகர்கள், ஆசிரியர்கள் மற்றும் குரலை அதிகமாய் பயன் படுத்துபவர்கள் பாடுவதற்கும், பேசுவதற்கும், மிகவும் கஷ்டப்படுவார்கள். இந்த மாதிரியான நோயாளிகளுக்கு குரல் நாணின் மேல் உள்ள வியாதியை என்டோஸ்கோப் மூலமாக கண்டுபிடித்து என்டோஸ்கோப்பில் உள்ள சேனல் வழியாக லேசர் புரோப்பை உள்ளே அனுப்பி அந்த நோயை லேசர் சக்தி மூலம் குணப்படுத்த முடியும்.

லேசர் பயன்படுத்துவதால் நோய் பாதித்த இடத்தை சுற்றி உள்ள பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நோயை மட்டும் குணப்படுத்த முடியும்.

சாதாரண ஆபரேஷன் செய்தால் குரல் ரொம்ப இறுகிப்போகும் வாய்ப்பு உண்டு. ஆனால் லேசர் ஆபரேஷனில் தொண்டை இறுகிப் போவதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.

மயக்கம் கொடுக்காமலே வெளியில் ஆபரேஷன் செய்தால், மணி நேரத்திலேயே அந்த நோயாளிகள் அவரவர் வேலையை செய்ய முடியும். பிரச்சினையானது வெகு சீக்கிரமே குணமாகி விடும். ஒரு வாரத்திலேயே குரல் இயல்பான நிலையை அடைந்து விடும்.

மூச்சு குழாய், உணவுக்குழாய்களில் கட்டி இருந்தால், அதனை அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் என் டோஸ்கோப் மூலமாக லேசர் பயன்படுத்தி கட்டியை கரைத்து விடலாம். இப்படி செய்வதால் நோயாளி சீக்கிரமாக மூச்சு வாங்குவதற்கு வசதியாக இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளியை சீக்கிரமாக குணப் படுத்தி, உயிரை காப்பாற்ற முடியும்.

இந்த மாதிரி வியாதி உள்ள நோயாளிகளுக்கு சிலர் சாதாரண அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு மயக்கம் கொடுக்காமல், ரத்தம் வீணாகாமல் லேசர் ஆபரேஷன் செய்ய முடியும்!

மிகவும் கஷ்டமான நோயாளிகளுக்கு கூட ஆபரேஷனை மிகவும் சுலபமாக செய்ய முடியும். மூக்கினுள் வளர்கிற சதை, பாலிப், கேன்சர், ரத்தக்கட்டி, போன்ற பிரச்சினைகளுக்கு லேசர் பயன்படுத்தி ஆபரேஷன் செய்வதால் நோயாளிக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் குணப்படுத்த முடியும்.

என்டோஸ்கோப் பயன்படுத்தி மூக்கு துவாரம் வழியாக ஆபரேஷன் செய்ய முடியும்.

ஒரு ஆபரேஷன் செய்வதற்கு லேசரை எப்படி பயன்படுத்த முடியும்?

சாதாரண ஆபரேஷனில் ஒரு பகுதியை சரி பண்ண வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்றால், அந்த பகுதியை சுற்றி உள்ள சதையை கத்தி அல்லது கத்தரிக்கோல் வைத்து அறுத்துத்தான் எடுக்க வேண்டி இருக்கும்.

ஆனால் லேசரில் கத்தி, கத்தரிக் கோல் இல்லாமல் லேசர் பீம் மூலமாக லேசர் சக்தியை பயன்படுத்தி சில முக்கியமான ஆபரேஷன்களை கஷ்டம் இல்லாமல் எந்தவித ஆபத்தும் இல்லாமல் செய்ய முடியும். சில இடத்தில் என்டோஸ்கோப் வழியாக உடலில் செலுத்தி உள்ளே இருக்கிற நோயை லேசர் புரோப் பயன்படுத்தி ஆபரேஷன் பண்ண முடியும்.

The post டான்சிலில் லேசர் மூலமாக ஆபரேஷன் – டாக்டர். இந்திரா கைலாசம் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
143
எந்த இடத்தில் எவ்வளவு கொழுப்பு? – டாக்டர். ராஜன் https://koodal.com/health/interviews/2021/12/29/weight-loss-tips-3d-scanner-to-find-fat-in-our-body/ Wed, 29 Dec 2021 01:25:48 +0000 https://koodal.com/?p=141 உடலில் கொழுப்பு சேர்ந்து விட்டதால் சதை போட்டு விட்டது. அதனால் கொழுப்பை குறைக்க ஜிம்முக்கு போகிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் கொழுப்பு இருக்கிறது என்றால் குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது? என்று யாருக்கு தெரிவதில்லை. இனிமேல் இந்த கவலை வேண்டாம். ஏனெனில்…

The post எந்த இடத்தில் எவ்வளவு கொழுப்பு? – டாக்டர். ராஜன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உடலில் கொழுப்பு சேர்ந்து விட்டதால் சதை போட்டு விட்டது. அதனால் கொழுப்பை குறைக்க ஜிம்முக்கு போகிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் கொழுப்பு இருக்கிறது என்றால் குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது? என்று யாருக்கு தெரிவதில்லை. இனிமேல் இந்த கவலை வேண்டாம். ஏனெனில் நம்முடைய உடலில் எந்த இடத்தில் கொழுப்பு உள்ளது? நிறைய உள்ளதா? குறைய உள்ளதா? கொழுப்பு இருந்தால் அதை குறைக்க எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் அதி நவீன ஸ்கேனர்கள் வந்து உள்ளன.

இந்த ஸ்கேனர்கள் முன் 30 செகண்டு நின்றால் போதும். மறு நொடி நீங்கள் எதிர் பார்க்கும் அத்தனை விவரங்களும் உங்கள் கைகளில் இருக்கும். குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பை குறைக்க எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம் என்ற ஆலோசனை கூட கிடைக்கும். தன் முன் நிற்கும் உருவத்தை 3டி முறையில் ஸ்கேனிங் செய்யும் இந்த நவீன ஸ்கேனர்கள், கொழுப்பு இடம், அளவு போன்றவற்றை வரைபடமாக வரைந்து கொடுத்து விடும்.

இந்த எந்திரங்கள் எக்ஸ்ரே போல இல்லாமல் ரேடியோ அலைகள் மூலம் இயங்குவதால் அடிக்கடி பயன்படுத்தலாம். எந்த பாதிப்பும் கிடையாது. அது போல குழந்தைகள், கர்ப்பிணிகள், காயங்களில் இருந்து சகஜ நிலைக்கு திரும்பி வரும் நோயாளிகள் ஆகியோரின் உடலில் கொழுப்பு மாற்றங்களை கண்காணிக்கலாம்.

குறிப்பிட்ட இடத்தில் கொழுப்பு சேருவது போல முன் கூட்டியே தெரிந்து கொள்வதால் உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்கோப்பாக பேணி பாதுகாக்கலாம். இந்த ஸ்கேனரின் முக்கியமான பணி, கொழுப்பை குறைப்பது தான் என்பதால் இதய நோய்கள், நீரழிவு நோய்கள் வர வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது.

The post எந்த இடத்தில் எவ்வளவு கொழுப்பு? – டாக்டர். ராஜன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
141
தொண்டையை காப்பாற்றுங்கள் – டாக்டர். எம்.என். சங்கர் https://koodal.com/health/interviews/2021/12/29/advice-to-maintain-your-throat-treatment-for-tonsils/ Wed, 29 Dec 2021 01:19:02 +0000 https://koodal.com/?p=139 பொதுவாக தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்? பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அநேகம் பேரை பாதிப்பவை இவை என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல், பெரியவர்களுக்கு தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை,…

The post தொண்டையை காப்பாற்றுங்கள் – டாக்டர். எம்.என். சங்கர் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பொதுவாக தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்?

பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அநேகம் பேரை பாதிப்பவை இவை என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல், பெரியவர்களுக்கு தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்றுநோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் எனது ஞாபகத்திற்கு வருகின்றன.

குழந்தைகளுக்கு தொண்டையில் வரும் முக்கியமான பாதிப்பு எது? ஏன்?

குழந்தைகளுக்கு தொண்டை வியாதிகளைப் பற்றி கூறும் போது, பொறுப்பான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பேணிக்காக்கிறார்கள் என்பதை கண்டு வியந்திருக்கிறேன். குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றால் நாம் உடனே இரத்த சோகை என்று நினைப்போம். ஆனால் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வாயைத் திறக்கச் செய்து, தொண்டையில் சதை பெரியதாக இருக்கிறதா என்று ஆராய்வர். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு டான்சில்ஸ் என்று பெயர்.

குழந்தைகளின் 12-வது வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்பொழுதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால்வலி வருகிறது. தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது

சில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள்பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் பொழுதே நாம் இந்த சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ள வேண்டும்.

டான்ஸிலைட்டிஸ்க்கு ஏன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது?

அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதலின் முக்கியத்துவம் என்னவென்றால் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு வாதக் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம். இந்தியாவில் குழந்தைகளுக்கு காணப்படும் இதய நோய்களில் மிக முக்கியமானவை தொண்டையில் வாழும் கிருமிகளினால் வருபவையே. ஆதலால், தொண்டை நோயை உடனுக்குடன் சரி செய்து கொள்வது அவசியம். இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். வேறு மருத்துவர்களால் தக்க சிகிச்சை அளிப்பது சாத்தியமல்ல.

டான்ஸில் ஆபரேஷன் செய்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய்விடும் என்கிறார்களே? உண்மையா?

தொண்டையில் ஏற்படும் அழற்சியை மாத்திரைகளால் சரிவர தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சில மருத்துவர்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி எழும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனைச் செய்யலாம். நான் மூன்று வயது குழந்தைக்கும் செய்திருக்கிறேன். அக்குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையின் பிரச்சினையை எப்படியாவது அறுவை சிகிச்சை செய்து தீர்க்கும்படி வற்புறுத்தினர். இப்பொழுது அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. அடிக்கடி வரும் ஜுரம், தொண்டை வலி தீர்ந்து விட்டது. இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் சதை வளர்ச்சி இருந்தால் அதனை எடுத்து விடுவது நல்லதாகும்.

சில குழந்தைகளுக்கு உச்சரிப்பில் குழப்பம் இருப்பது எதனால்?

குழந்தைகள் மழலையாக பேசும். சில குழந்தைகளுக்கு டா, தா முதலிய வார்த்தைகள் உச்சரிப்பது கடினமாக இருக்கும். இதற்கு காரணம் நாக்கிற்கு அடியில் சுருக்கு இருப்பதால் தான். இதனை ஐந்து வயதிற்குள் சரி செய்து விடுவது நல்லது. இல்லாவிடில், அவர்களுக்கு பின்னாளில் உச்சரிப்பு பிரச்சினை எழ வாய்ப்பு உண்டு.

உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் அவசியம் கவனிக்க வேண்டுமா?

சில பெரியவர்களுக்கு உணவு உட்கொள்ள தடை படுதல் உண்டாகும். இவை 1-2 நாட்களுக்கு இருந்தால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை மருத்து வரை அணுகுதல் நல்லது. ஏனெனில் புற்று நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் செய்தால் நல்ல தீர்வு காணப்படும். புற்றுநோய் தொண்டை தொடர் புடையதாக உள்ளது. இந்ததொண்டை பாதிப்பு ஆண்களுக்கு சாதாரணமாக காணப்படுகின்றன. பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் சாதாரணமாக காணப்படுவதைப்போல. ஆண்களுக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிதில் குணப் படுத்தலாம் இதற்கு அதன் குணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். உணவு உட்கொள்ள தடை, எடை குறைதல், வாந்தி, கழுத்தில் கட்டி கிளம்புதல், குரல் மாற்றம், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருக்கலாம். இவையாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று, இரண்டு அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், இவற்றுடன் எடை குறைதல் இருந்தால் அவசியம் தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இதனை கண்டறி வதற்கு என்டோஸ் கோபி என்ற உள்நோக்கி கருவி இப்போது உள்ளது.

பான்பராக் போன்ற போதை பாக்கு பழக்கம் தொண்டையை பாதிக்கும் தானே?

இப்பொழுது இளைஞர்களுக்கு பான்பராக் போடும் பழக்கம் மிக சரளமாகி விட்டது. இதனால் வாய் புண்ணாகி, பின்னர் புண் காய்ந்தவுடன் தோல் சுருங்கி புற்றுநோயாக மாறுகிறது. இதற்கு கு€செடிளளை என்று பெயர். பான்பராக்கை நிறுத்திவிட்டு தக்க ஊசி மருந்தை செலுத்தினால் இதனை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய லாம்.

குரலையே பிரதானமாக கொண்டவர்களுக்கு தொண்டையில் என்னன்ன பாதிப்பு வரலாம்?

மேடை பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சில சமயங்களில் குரல் சரிவர பேசமுடியாமல் போகலாம். இதற்கு காரணம், அவர்கள் குரலை சீராக வைக்காமல் இருப்பது தான். மிக அழுத்தமாக நாம் பேசும்பொழுது குரல் கணீர் கணீர் என்று எடுத்து விடப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது குரல்வளையில் தேய்தல் உண்டாகி பின்னர் சதை உண்டாகிறது. இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தால் இந்த பாதிப்பு குணமாகி விடும். இல்லா விடில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுக வேண்டும்.

அடிக்கடி வரும் வாய்ப் புண், ஆணிற்கு பெண் குரல் போன்ற பாதிப்புகள் ஏன்?

வாய்ப்புண் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் இளைஞர்களை இது வெகுவாக பாதிக்கிறது. நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாகும் தருணத்தில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தக்க மருத்துவம் செய்தால் இதற்கு நிவர்த்தி காணலாம். இளைஞர்களுக்கு பெண்களைப் போன்ற கீச் குரல் பருவ வயதில் வருவதுண்டு. இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு தான். இதனையும் தக்க மருத்துவம் மூலம் நிரந்தரமாக தீர்வு காணலாம்.

The post தொண்டையை காப்பாற்றுங்கள் – டாக்டர். எம்.என். சங்கர் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
139
மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் – டாக்டர். ராஜிவ் https://koodal.com/health/interviews/2021/12/29/side-effects-of-alcohol/ Wed, 29 Dec 2021 01:06:18 +0000 https://koodal.com/?p=131 நாம் சாப்பிடுகிற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப் போக, மீதமுள்ள பல்வேறு சத்துக்களம் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். அதுபோல மது அருந்தும் போது…

The post மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் – டாக்டர். ராஜிவ் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நாம் சாப்பிடுகிற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப் போக, மீதமுள்ள பல்வேறு சத்துக்களம் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும்.

அதுபோல மது அருந்தும் போது அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலைச் சென்றடையும். பல்வேறு உணவுகள், மருந்துகள் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுவது போல, மதுவின் வளர்ச்சிதை மாற்றங்களிலும் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது. மது முதலில் கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜீனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜீனஸ் என்ற நொதியால், அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப் பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிக்கும்.

மதுவை தொடர்ந்தும், அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும், பெண்கள் இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும்.

மது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும்.

மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள்

கல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குதல், கொழுப்புப் பொருட்கள் அதிகம் மிகுந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல். ஹையலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரிதாதல், ஹையலினால் நார் இழமைப் பொருட்கள் மிகுதல் போன்றவை தோன்றி இறுதியில் கல்லீரல் இறுக்கி நோயாக மாறும். அதிக மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப் படியும்.

அறிகுறிகள்

துவக்கத்தில் அறிகுறிகள் தெரியாது, ஆரம்ப நிலையில் கல்லீரல் வீக்கம் இருக்கும். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளுடன் காமாலை, மூளை நலிவு, மகோதரம், வைட்டமின் சத்துக்குறைபாடு, பித்தநீர் குழாய் அடைப்பால் வயிற்றுவலி போன்றவையும் பிறகு கல்லீரல் இறுக்கி நோயும் வரும்.

சிகிச்சை

கல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதனால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை மது அருந்துவதை விட்டுவிடுவதுதான். உடல் எடைக்குத் தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். கல்லீரல் இறுக்கி நோய் வருமுன் தடுப்பு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கல்லீரல் தவிர, இதயம், மூளை, நரம்பு மண்டலம், இனவிருத்தி உறுப்புகள், கணையம், இரைப்பை குடல்கள் என பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.

The post மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் – டாக்டர். ராஜிவ் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
131
சிரிப்பு : மருத்துவ பலன்கள் – டாக்டர். ஜி. வரதராசன் https://koodal.com/health/interviews/2021/12/28/health-dr-intervieweasy-health-tip-that-everyone-can-do-is-laugh/ Tue, 28 Dec 2021 23:24:15 +0000 https://koodal.com/?p=128 பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு. சில குறிப்பிட்ட சமயங்களில் இது தானாக எழுவதே தவிர, நாமாக யோசித்து வருவது அல்ல. மூளையின் செயல்பாட்டால் உண்டாகக்கூடியதாக இருந்தாலும் உணர்வுகளால், நினைவுகளால் தூண்டப்படக்கூடியது. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, கை-கால்களின் தசைகளும் இயக்கப்படுகிறது. முதல்…

The post சிரிப்பு : மருத்துவ பலன்கள் – டாக்டர். ஜி. வரதராசன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு. சில குறிப்பிட்ட சமயங்களில் இது தானாக எழுவதே தவிர, நாமாக யோசித்து வருவது அல்ல. மூளையின் செயல்பாட்டால் உண்டாகக்கூடியதாக இருந்தாலும் உணர்வுகளால், நினைவுகளால் தூண்டப்படக்கூடியது. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, கை-கால்களின் தசைகளும் இயக்கப்படுகிறது.

முதல் சிரிப்பு சுமார் மூனறை முதல் நான்கு மாத வாக்கில் ஆரம்பிக்கிறது. அழுகையைப் போலவே தாய் மற்றும் பிறரது கவனத்தை ஈர்க்க குழந்தை சிரிப்பையும் கையாளுகிறது.

பெரும்பாலான சிரிப்புகள் ஜோக் அடிப்பதால் வருவதாக நாம் நினைக்கிறோம். அப்படியல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும், பேசும்போதும் இயல்பாக சிரிப்பு வருகிறது. இது சமூகப் பிணைப்பின் அடையாளம் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.

சிரிப்பினால் பேச்சு தடைபடுவதில்லை… அதே சமயம், ஒரு நிறுத்தற் குறி மாதிரி சிரிப்பு பயன்படுகிறது.

சிரிப்பின் முன்னோடி

மனித சிரிப்பின் முன்னோடி நமது மூதாதையரான குரங்குகள் பல்லை விரித்துக்காட்டுமே.. அதுதான் என்கிறார்கள். எல்லா விலங்குகளுமே விளையாடும் போது வித்தியாசமான ஒலி எழுப்பத்தான் செய்கின்றன. அதாவது சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் அந்தச் சிரிப்புகள் அனைத்தும் மனித சிரிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இதனால் அவற்றை சிரிப்பாக நாம் எடுத்துக் கொள்வதில்லை.

சிரிப்பு விளையாட்டோடு தொடர்புடையது. நாம் குஷி மூடில் இருந்தால் தான் சிரிப்போம்… இல்லாவிட்டால் உம்மென்றுதான் இருப்போம். நமக்கும் விளையாட்டுக்கும் இடையில் தூரம் அதிகம் என்பதால் தான், பெரியவர்களை விட சிறுவர்களே அதிகமாக சிரிக்கிறார்கள். இதுதான் உண்மை என்கின்றன ஆய்வுகள்.

சிரிப்பை பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், சிரிப்பைக் கூட பிரித்துப் பார்க்கலாம்.. யாரைப் பார்த்து சிரிக்கிறோம்.. யாருடன் சிரிக்கிறோம் என்பதிலிருந்து நமது சிரிப்பின் தன்மை தெரியவரும்.

அசட்டுச்சிரிப்பு என்பது, இக்கட்டான நிலையில் நாமாக வலிய சிரிப்பது, நாம் பிறரை தவிர்க்க முனைதல். ஏளனச் சிரிப்பு இருக்கிறது, அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கு இதை பயன்படுத்துகிறோம். கர்வச்சிரிப்பு இருக்கிறது,

தன்னைத்தானே உயர்வாக நினைப்பதைக் குறிக்கிறது. இதைபோல் இளநகை, குரு நகை, குரூர நகை என சிரிப்பை நாமாக வேறுபடுத்திக்கொள்ளலாம்.

இயல்பான சிரிப்பில் இரண்டு வகைகள் உள்ளன. தானாக வருவது, நகைச் சுவையால் வருவது, அதாவது உடல் ரீதியான சிரிப்பு, உளம்சார்ந்த சிரிப்பு.

நாம் எதையாவது நகைச்சுவையான ஒன்றைப் பார்த்தால் சிரிக்கிறோம். நமக்கு வித்தியாசமாகத் தெரிவதைப் பார்த்து சிரிக்கிறோம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வயதினருக்கு வித்தியாசமாகப்படும். சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தினமும் பதினேழு முறை சிரிக்கிறார்கள்.

மருத்துவப் பலன்கள்

வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். மனஇறுக்கத்திற்குக் காரணமான ஹார்மோனைக் கட்டுப்படுத்தி மனத்தை தளர்த்துகிறது. கடுமையான நோய்களையும் எளிமையாக மாற்றுவது சிரிப்பு.

மரம் அறுக்கும் வேலையில் ஈடுபடும் பத்து நிமிட உழைப்பிற்கு ஈடானது நூறு முறை சிரிப்பது என்கிறார்கள். சிரிப்பதால் உதரவிதானம், நுரையீரல், வயிறு, கால்கள், முகம், முதுகு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் பலன் கிட்டுகிறது. நமது மன நலனை மேன்மையுறச் செய்கிறது. பயம், கோபம் போன்ற எதிரிடை எண்ணங்களை மாற்றுகிறது.

சிரித்தே நோயைப் போக்கலாம் என்பதற்காக மும்பையில் சிரிப்பு கிளப் ஆரம்பிக்கப்பட்டு பல கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

சிரிக்கத் தெரியாதவனை மிருகம் என இகழும் உலகம் சிரிக்கத் தெரிந்தவன், வாழ்க்கையை ஜெயிக்கப் பிறந்தவன் எனப் போற்றுகிறது. நீங்கள் எப்படி?

The post சிரிப்பு : மருத்துவ பலன்கள் – டாக்டர். ஜி. வரதராசன் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
128
பேன் பிரச்சனை தொல்லை நீங்க – டாக்டர். ஆர். சதீஸ்குமார் https://koodal.com/health/interviews/2021/12/28/facts-prevention-and-remedies-for-lice/ Tue, 28 Dec 2021 23:21:48 +0000 https://koodal.com/?p=126 ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும் என்பார்கள். பொதுவாக, பேன் தொல்லை அருவருப்பை உண்டாக்கும் பிரச்சினை. பிறர் முன்னிலையில் நாகரீகம் மறந்து தலையை சொறிய வைப்பதும், யாரும் பார்க்காத நேரத்தில் ஆடையில் இருந்து எடுத்து நச்.. என நசுக்குவதும்…

The post பேன் பிரச்சனை தொல்லை நீங்க – டாக்டர். ஆர். சதீஸ்குமார் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>

ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும் என்பார்கள். பொதுவாக, பேன் தொல்லை அருவருப்பை உண்டாக்கும் பிரச்சினை.

பிறர் முன்னிலையில் நாகரீகம் மறந்து தலையை சொறிய வைப்பதும், யாரும் பார்க்காத நேரத்தில் ஆடையில் இருந்து எடுத்து நச்.. என நசுக்குவதும் பலரிடம் காணப்படும் பழக்கம். இந்தப் பழக்கத்தை வித்திட்டு வளர்க்கும் பேன் தொல்லையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின் போது இலகுவில் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றும்.ஆயினும் சீப்பு, தொப்பி, தலையணை போன்றவற்றலும் பரவலாம், பேன்கள் பறக்கவோ தத்தவோ முடியாதவை. ஊர்ந்தே செல்பவை. எனவே ஒருவருக்கு அருகில் இருப்பதால் தொற்ற மாட்டாது. ஒரு பேன் தொற்றியவுடன் வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியமாட்டாது. பேன் பெருகிக் கடிக்கும் போது ஏற்படும் அரிப்பு சினமூட்டும். ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும்.

மனிதரை அண்டிப் பிழைக்கும் சிறு பூச்சி தான் பேன். இவை மனிதனின் உடற்பாகத்தில் காணப்படும். இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல இவற்றின் பெயர்களும் மாறுபடும்.

தலைப்பேன், சீலைப்பேன், அடி வயிற்றுப்பேன்.

பேன் ஒரு சிறகற்ற பூச்சிவகையை சேர்ந்தது. மேலும் கீழும் தட்டையான பகுதிகளால் ஆனது. அதனுடைய தலை ஒரு பேரிக்காய் போன்ற அமைப்பை உடையது. தலையில் ஒரு தும்பிக்கை, இரண்டு உணர்ச்சி உறுப்புகள், இரண்டு பலகூறுகள் உள்ள கண்கள் முதலியன உள்ளன. ஒவ்வொரு பக்கத்திற்கும் மூன்று கால்கள் வீதம் ஆறு கால்களைக் கொண்டது. கால்களின் முனையில் வளைந்த நகமிருக்கும். இதன்மூலம் முடியை நன்றாகப் பற்றிக்கொள்ள முடியும். ஆண் பேனைவிட பெண் பேன்தான் உருவில் பெரியது.

ஈர் அல்லது பேனின் முட்டை ஒரு சோளக்கதிர் போன்ற உருவமுடையது. அதன் முனையில் ஒரு மூடி போன்ற அமைப்புள்ளது. இதன் வழியே முட்டையிலிருந்து வரும் குஞ்சு வெளிப்படும்.

பேன்களின் வகைகளையும், அவை பரப்பும் நோய்களையும் தெரிந்து கொள்ளுங்களேன்.

பேனின் ஆயுள் ஒரு மாதமாகும். இது தினந்தோறும் 7 முதல் 10 முட்டைகள் வரை இடுகிறது. எட்டு நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படும். இது எட்டு நாட்களுக்குப் பிறகு வயதுவந்த பேனாக மாறுகிறது.
சுத்தமான தலையில் பேன் தங்காது. அதிக காய்ச்சல், அதிக உழைப்பு போன்றவற்றினால் ஏற்படும் வெப்பத்தினால் இவை உடலில் தங்காது. உயிரற்ற உடலிலும் பேன்கள் தங்காது.

தலைப்பேன்

தலைப்பேன் வெளுத்த பழுப்பு நிறம் உடையது. பெண் பேன் 3-4 மி.மீ. நீளமுடையது. இவை ரத்தத்தை உறிஞ்சுவதில் வல்லவை. தங்கள் உடல் வெடித்துப்போகும் அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சும். தோலைத் துளைத்து, ரத்தத்தை உறிஞ்சும் போது நஞ்சு போன்ற திரவத்தை உற்பத்தி செய்யும். இது அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும்.

நோய்

பெண்களை பெரிதும் பாதிக்கும். ஆண்களில் அசுத்தமானவர்களிடையே காணப்படும். குழந்தைகளிடம் பள்ளிப் பருவத்திற்கு முன்பு காணப்படும். நாளடைவில் பையன்களிடையே குறைந்து பெண்களிடம் அதிமாகும். தலைப்பேன் தலைமுடியிலும், தாடியிலும் காணப்படும்.

ஒரே சீப்பு, ஒரே பிரஷ பயன்படுத்துவோர், நீண்ட தலைமுடி, அடிக்கடி முடியை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்கள் ஆகியோருக்குப் பரவுகிறது.

நோயின் முக்கிய அறிகுறி அரிப்பு. தலையின் பின்பக்கத்திலும், பக்கவாட்டிலும் அதிகமாக ஏற்படும். சொறிவதால் நீர்க்கசிவும், பக்கு கட்டுதலும் ஏற்பட்டு, அவற்றின் மீது மற்ற நோய்க்கிருமிகள் படர்ந்து தலையின் பின்பகுதியிலும், கழுத்துப்பகுதியிலும் நெறிக்கட்டிக் கொள்ளும். நோய் அதிகமானால் தலைமுடி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டும் அசுத்தமாகவும், துர்நாற்றத்துடனும் காணப்படும். மார்பிலும், முதுகிலும் சிறுசிறு கொப்புளங்கள் காணப்படும்.

சிகிச்சை

தலைமுடியை ஒட்ட வெட்டவேண்டும். மொட்டை அடிப்பது நலம். சல்போனமைடு மாத்திரைகளை வயதுக்கு ஏற்றவாறு மருத்துவர் பரிந்துரையின் பேரில் கொடுக்க வேண்டும். பென்ஜயில் பென்ஜயேட் – 25 மருந்து, டி.டி.டீ – 5 தினந்தோறும் ஐந்து நாட்கள் வரை தடவி முடியை கழுவ வேண்டும்.

சீலைப்பேன்

தோலில் வாழாமல் மடித்துத் புதைக்கப்பட்ட உடை ஓரங்களில் வாழ்கின்றன. ரத்தம் உறிஞ்ச மட்டுமே உடைகளைவிட்டு தோல்மீது வந்து ரத்தத்தை உறிஞ்சி உண்டுவிட்டு திரும்பவும் உடைக்குத் திரும்பும். உடல் வெப்பத்தினால் ஈர்கள் பொறிக்கும். உடம்பில் அதிகமுடி உள்ளவர்களிடம் இப்பேன்களைக் காணலாம்.

நோய் அறிகுறி

பேன் கடித்த இடத்தில் தோல் சிவந்து காணப்படும். ரத்தப் பள்ளப் புள்ளியுடன் கூடிய பரு காணப்படும். தாளமுடியாத அரிப்பு உண்டாகும்.

இப்பேன் கடிக்க ஏற்ற இடம் தோள் பட்டை, உடல் பாகம், பிட்டம் முதலியன. அரிப்பினால் சொறியப்பட்டு நகக்காயங்களும், ரத்தக்கசிவும், பக்குகளும் இருக்கும். கவனிக்கப்படாத நிலையில் பாக்டீரியாக்கள் தொற்றி தொற்று நோய்களை உண்டாக்கும்.

சிகிச்சை பெறாத நோயாளியின் தோல் கறுத்து, உலர்ந்து, செதில் செதிலாக, ஆங்காங்கே பக்குகளுடன், சொறிந்த புண் மற்றும் வடுவுடன், கரப்பான் நோயுடன் காணப்படும்.

சீலைப்பேன் நோய் கும்பல் கும்பலாக கூடி வசிப்போரிடையேயும், அடிக்கடி துணிகளை மாற்ற முடியாதவர்களிடையேயும், அதிக துணிகளை உடுத்திக் கொண்டு குளிர்ப்பிரதேசத்தில் வாழும் மக்களிடையேயும், ராணுவத்தினரிடையேயும் காணப்படும். சுற்றுப்புற சுகாதார மற்றவர்களிடமும், வசதியில்லாதவர்களிடமும் இது காணப்படும்.

சிகிச்சை

சிகிச்சை முறை எளிதானது. துணி மணிகளைச் சுத்தமாக துவைத்து, சூடான சலவைப்பெட்டியினால் தேய்த்தாலே பேன்களும் ஈறுகளும் அழிந்துவிடும்.

10 டி.டி.டீ. பவுடரையும் தூவி துணிகளை மடித்துவைத்திருந்தாலும் பேன்களும் ஈறுகளும் அழிந்துவிடும்.

அடிவயிற்றுப்பேன்

இந்தப் பேன் உருவத்தில் நண்டு போன்ற அமைப்பு உடையதாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கும். முன்னங்கால்கள் மெலிந்தும், பின்னங்கால்கள் தடித்தும் நண்டின் கொடுக்கு போன்ற அமைப்பையும் இப்பேன் கொண்டுள்ளது. இதனால் அடிவயிற்றுச் சுருண்ட முடிகளை இவைகள் நன்றாகப் பற்றிக்கொள்ள ஏதுவாகிறது. இது தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் மற்ற பேன்களைப் போல ஒத்துள்ளது.

இப்பேன் அடிவயிற்றில் இருக்கும் சுருண்ட முடிகளிடையே காணப்படும். சில சமயங்களில் கண் இமைகளிலும், அக்குள் மயிர்க்கால்களிலும், நெஞ்சு முடிகளிலும் காணப்படும். இவை இரு முடிகளைத் தம்முடைய கால்களால் இறுகப்பற்றிக்கொண்டு அதன் நடுவில் தலையை தோலில் புதைத்துக்கொண்டு இருக்கும்.

நோய் அறிகுறிகள்

நோய் அறிகுறிகள் சுலபத்தில் வெளியில் தெரியாது. இப்பேன் நோய் இருப் பவர்களிடத்தில் மேக்குலே செருலே என்ற சிறிய கருமையான இரும்பு சாம்பல் நிறத்திட்டுக்கள் ஒரு செ.மீ. அளவில் நெஞ்சு மற்றும் வயிறு,தொடைகள், கரங் கள் ஆகிய இடங்களில் காணப்படும்.

சிகிச்சை

அடிவயிற்று முடியை அகற்றுவது, 10 டி.டி.டீ.பவுடரை தெளித்து வைப்பது, பென்ஜயில் பென்ஜயேட் களிம்பை தடவி வைப்பது. பேன் தொல்லையும் தவிர்க்க முடியாத பிரச்சினைதான். கூச்சப்படாமல் மருத்துவ உதவியை நாடுவதுதான் பேன் தொல்லையால் வருத்தப்படுவோருக்கு உள்ள நல்ல வழி!

The post பேன் பிரச்சனை தொல்லை நீங்க – டாக்டர். ஆர். சதீஸ்குமார் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
126