பொது Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/general/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sat, 01 Mar 2025 17:21:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 பொது Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/general/ 32 32 201197430 கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி! https://koodal.com/news/2025/03/01/4-people-die-of-electrocution-at-a-church-festival-in-kanyakumari/ Sat, 01 Mar 2025 17:21:57 +0000 https://koodal.com/?p=79126 கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று தேர்பவனி நடக்க இருந்தது. தேரை அலங்கரிப்பதற்காக இரும்பு ஏணியை நகர்த்தி சென்றபோது மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக இறந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இணையம் புத்தன்துறை என்ற மீனவ கிராமம் உள்ளது.…

The post கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று தேர்பவனி நடக்க இருந்தது. தேரை அலங்கரிப்பதற்காக இரும்பு ஏணியை நகர்த்தி சென்றபோது மின்சாரம் தாக்கி 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இணையம் புத்தன்துறை என்ற மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 15 நாட்களாக திருவிழா நடந்து வருகிறது. இன்று இரவு தேர்பவனி நடைபெற உள்ளது. இதையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி இன்று நடந்து வந்தது. இதற்காக தேவாலயத்தில் உள்ள ராட்சத இரும்பு ஏணியை 4 பேர் நகர்த்தி கொண்டு சென்றனர். தேவாலயத்துக்கு வெளியே 4 பேரும் ராட்சத இரும்பு ஏணியை நகர்த்தி சென்றபோது அந்த பகுதியில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் இரும்பு ஏணி உரசியுள்ளது. இதனால் அடுத்த நொடியே உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் இரும்பு ஏணி வழியாக பாய்ந்தது. இதில் ஏணியை நகர்த்தி சென்று கொண்டிருந்த அருள், மைக்கேல் பிண்டோ உள்பட 4 பேரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடிவந்தனர். மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் இருந்த 4 பேரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருவர் மட்டுமே உயிருக்கு போராடினார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அவரும் இறந்தார். இதனால் மின்சாரம் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 4 ஆக அதிகரித்தது.

The post கன்னியாகுமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
79126
ஓசூர் அருகே டாடா தொழிற்சாலையில் தீ விபத்து! https://koodal.com/news/2024/09/28/fire-accident-at-tata-factory-near-hosur/ Sat, 28 Sep 2024 10:45:50 +0000 https://koodal.com/?p=66254 ஓசூர் அடுத்த கூத்தனப்பள்ளி பகுதியில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திம்ஜேப்பள்ளி ஊராட்சி கூத்தனப்பள்ளி பகுதியில் செல்போன் உதிரி…

The post ஓசூர் அருகே டாடா தொழிற்சாலையில் தீ விபத்து! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஓசூர் அடுத்த கூத்தனப்பள்ளி பகுதியில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திம்ஜேப்பள்ளி ஊராட்சி கூத்தனப்பள்ளி பகுதியில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இந்நிலையில் இன்று (செப்.28) காலை தொழிலாளர்கள் ஷிப்ட் முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது, அங்கிருந்த ஆனோ கெமிக்கல் பிளாண்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த 3 ஆயிரம் தொழிலாளர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சுமார் 4 மணி போரட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்க்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் பொருட்கள் சேதம் குறித்து ராயக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் டாடா தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் விடுமுறை அளித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாடா தொழிற்சாலை பேருந்து கெலமங்கலம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலைக்கு சொந்தமான 7 பேருந்துகளை அடித்து சேதப்படுத்தினர். இந்நிலையில், தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டாடா தொழிற்சாலையில் அடுத்தது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஓசூர் அருகே டாடா தொழிற்சாலையில் தீ விபத்து! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
66254
வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்! https://koodal.com/news/2024/09/10/the-president-of-the-chamber-of-commerce-vellaiyan-passed-away/ Tue, 10 Sep 2024 13:01:03 +0000 https://koodal.com/?p=65261 சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சில ஆண்டுகளாக சிகிச்சை…

The post வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 3-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அவரது உடல்நிலை தொடர்பாக, நேற்று எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஆனந்த் மோகன் பாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் இன்று (செப்.10) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

The post வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
65261
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு! https://koodal.com/news/2024/08/18/male-elephant-dies-near-srivilliputhur-after-getting-stuck-in-electric-fence/ Sun, 18 Aug 2024 16:45:33 +0000 https://koodal.com/?p=63504 ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. ராஜபாளையத்தில் இருந்து ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்கு உட்பட்ட…

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

ராஜபாளையத்தில் இருந்து ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்கு உட்பட்ட அழகர் காடு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது, ராக்கச்சி அம்மன் கோயில் ஆர்ச் முன் உள்ள விவசாயத் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தெரியவந்தது. இறந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என வனத்துறையினர் தெரிவித்தனர். தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாட்சியார்புரத்தை சேர்ந்த துரைப்பாண்டியன்(60) என்பவரை கைது செய்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்: “ராஜபாளையத்தைச் சேர்ந்த கோபால மூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததால், காவலாளி துரைப்பாண்டி என்பவர் தோட்டம் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து சட்ட விரோதமாக மின் வேலி அமைத்துள்ளார். இரவில் அவ்வழியே வந்த யானை மின் வெளியில் சிக்கி உயிரிழந்து உள்ளது. மழை பெய்ததன் காரணமாக நாளை(ஆகஸ்ட் 19) யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின் அடக்கம் செய்ய உள்ளோம்” என்றனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
63504
கொடைக்கானலில் நாளை மலர் கண்காட்சி துவக்கம்! https://koodal.com/news/2024/05/16/kodaikanal-flower-exhibition-starts-tomorrow/ Thu, 16 May 2024 17:17:26 +0000 https://koodal.com/?p=56319 கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. இதையொட்டி பூங்காவில் பூத்து குலுங்கும் கோடிக்கணக்கான மலர்களை காண சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி நாளை துவங்கி மே 26ம்…

The post கொடைக்கானலில் நாளை மலர் கண்காட்சி துவக்கம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. இதையொட்டி பூங்காவில் பூத்து குலுங்கும் கோடிக்கணக்கான மலர்களை காண சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி நாளை துவங்கி மே 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாட்கள்தான் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு 10 நாட்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக ஏற்கனவே பூங்காவில் நடப்பட்ட பல லட்சம் மலர் நாற்றுகளில் தற்போது கோடிக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

சிறப்பம்சமாக சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு நெருப்புக்கோழி, சேவல், மயில், மலர் வீடு, மலர் இதழ்கள் ஆகிய உருவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மலர் கண்காட்சியில் 25,000 மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. தனியார் பங்கேற்பாளர்களும் தங்களது மலர்களை பார்வைக்காக வைக்க உள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பூங்கா அலுவலகம் அருகே ‘ஐ லவ் கோடை’ என்று சால்வியா மலர்களால் செல்பி பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி முன்னேற்பாட்டு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிநீர், கழிவறை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி தர வேண்டும், மலர் கண்காட்சி நடக்கும் 10 நாட்களும் சுற்றுலாப்பயணிகள் தங்கு தடையின்றி வந்து கண்டுகளிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மலர் கண்காட்சியுடன் கோடை விழாவும் நடைபெற இருப்பதால் கொடைக்கானலில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலர் கண்காட்சியில் முதன்முதலாக சுற்றுலாப்பயணிகளுக்காக ‘360 டன்னல் என்ற ரீல்ஸ்’ வீடியோ எடுப்பதற்கான புதிய கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் நின்று கொண்டு தங்களது செல்போன் கேமரா மூலம் 360 டிகிரி சுழன்று வீடியோ எடுத்து கொள்ள முடியும். இதன்மூலம் சுற்றிலும் உள்ள மலர் கூட்டத்தை கவர் செய்ய முடியும்.

The post கொடைக்கானலில் நாளை மலர் கண்காட்சி துவக்கம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56319
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்! https://koodal.com/news/2024/05/13/denial-of-permission-to-music-program-not-acceptable-high-court/ Mon, 13 May 2024 17:48:57 +0000 https://koodal.com/?p=56041 ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு…

The post ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, வளத்தி காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறைச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வளத்தி காவல் நிலையத்தினர் கடந்த ஏப்ரல் 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் பாஸ்கரன், மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக விளக்கம் அளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், சட்டத்துக்கு உட்பட்டு கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என, விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலையத்தினருக்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.

The post ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56041
ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை! https://koodal.com/news/2024/03/21/jaki-vasudev-brain-surgery/ Thu, 21 Mar 2024 04:23:17 +0000 https://koodal.com/?p=51424 ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், எதிர்பார்த்ததைவிட உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த 4 வாரங்களாக…

The post ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், எதிர்பார்த்ததைவிட உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த 4 வாரங்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஜக்கி வாசுதேவ் உடல்நிலை குறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் நிபுணர் வினித் சூரி பேசும் விடியோவையும் ஈஷா அறக்கட்டளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் மருத்துவர், ”கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மருத்துவமனையில் இருந்தவாறு ஜக்கி வாசுதேவ் பேசும் விடியோவையும் அவரின் சமூகவலைதளப் பக்கத்தில் ஈஷா நிறுவனம் பகிர்ந்துள்ளது. ”நான் டெல்லியில் இருக்கிறேன். நரம்பியல் நிபுணர்கள் என்னுடைய மண்டையைத் திறந்தனர். அதில் ஏதேனும் உள்ளதா எனப் பார்த்தனர். ஆனால், அங்கு ஒன்றுமில்லை. முழுவதும் காலியாக இருப்பதால் மீண்டும் பழையபடி தையலிட்டுவிட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
51424
உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து ஒருவர் பலி! https://koodal.com/news/2024/03/13/one-person-died-after-being-buried-in-the-ground-during-the-construction-work-in-nilgiri/ Wed, 13 Mar 2024 11:05:45 +0000 https://koodal.com/?p=50809 உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், இரு வடமாநில தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான பகுதிகளில் கட்டுமானப் பணிகள்…

The post உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து ஒருவர் பலி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், இரு வடமாநில தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான பகுதிகளில் கட்டுமானப் பணிகள் மலைச் சரிவுகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கட்டுமான பணிகளுக்காக தடுப்பு சுவர் கட்டும்போது அல்லது பள்ளம் தோண்டுபோது மண் சரிந்து விழுந்து அதில், தொழிலாளர்கள் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், உதகை அருகேயுள்ள பாபுசா லைன் பகுதியில் கவுசல்யா என்பவரின் வீட்டின் அருகே தடுப்புச் சுவர் கட்டுவதற்காக கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான் (20), ஜாகீர் (26), இம்தியாஸ் மற்றும் அமீர் ஆகியோர் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாரதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில், ரிஷ்வான் மற்றும் ஜாகீர் ஆகியோர் மண்ணில் புதையுண்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் அவர்களை ஜேசிபி இயந்தரம் கொண்டு மண்ணை அகற்றி, மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் இருவரையும் உயிருடன் மீட்டனர்.

இருவரும் உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், ஜாகீர் நல்ல நிலையில் உள்ளார். ஆனால், ரிஸ்வானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ரிஸ்வான் உயிரிழந்தார். விபத்து நடத்த இடத்துக்கு நீலகிரி எஸ்பி., சுந்தரவடிவேல் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், எம்எல்ஏ., கணேஷ் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

The post உதகையில் கட்டுமான பணியின்போது மண்ணில் புதைந்து ஒருவர் பலி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
50809
உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகள் கழித்து குறைக்கப்பட்டுள்ளது! https://koodal.com/news/2024/02/27/elevated-passenger-train-fare-reduced-after-4-years/ Tue, 27 Feb 2024 10:16:24 +0000 https://koodal.com/?p=49512 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகள் கழித்து குறைக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை பரவி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த சமயத்தில் மத்திய…

The post உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகள் கழித்து குறைக்கப்பட்டுள்ளது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகள் கழித்து குறைக்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை பரவி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த சமயத்தில் மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியது. ஆதாவது பாசஞ்சர் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயரை மாற்றிய மத்திய அரசு சிறப்பு விரைவு ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பாசஞ்சர் ரயில்களில் பயணித்து வந்தனர். கொரோனா தொற்றுக்காலத்தில் பயணிகள் ரயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்பு கட்டணமாக உயர்த்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பயணிகள் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் குறைக்கவே இல்லை. இது தொடர்பாக பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள் தொழிற்சங்கங்கள் கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால், மத்திய அரசும் ரயில்வேயும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் சிறப்பு விரைவு ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தையே பாசஞ்சர் ரயில்களிலும் வசூலித்து வந்தது. இதன் காரணமாக அன்றாடம் பாசஞ்சர் ரயில்களை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர்.

இந்த நிலையில் தற்போது ரயில்வே நிர்வாகம் நேற்று பாசஞ்சர் ரயில்களில் பழைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக அறிவித்து யுடிஎஸ் செயலியிலும் அதை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் சாதாரண பயணிகள் ரயில்களின் கட்டணம் முன்பு இருந்த நிலைக்கு குறைந்து உள்ளது. ரயில் நிலையங்களிலிம் மீண்டும் பழைய கட்டணத்தில் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தினசரி ரயிலில் செல்லும் அலுவலர்கள் மாணவ மாணவிகள் வர்த்தகர்கள் தொழிலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழைய பாசஞ்சர் ரயில் கட்டண விகிதத்தையே மக்கள் மறந்துபோய் இருந்த நிலையில், அது மீண்டும் அமலுக்கு வந்து இருப்பதை பார்த்து பேருந்துகளை விட குறைவான கட்டணமாக உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.

The post உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகள் கழித்து குறைக்கப்பட்டுள்ளது! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
49512
சென்னையில் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு! https://koodal.com/news/2024/02/27/former-aiadmk-mla-dies-in-road-accident-near-chennai/ Tue, 27 Feb 2024 05:49:52 +0000 https://koodal.com/?p=49469 முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரவிக்குமார், சென்னையில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி நிர்மலா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (65). 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொன்னேரி சட்டமன்ற…

The post சென்னையில் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரவிக்குமார், சென்னையில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி நிர்மலா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (65). 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். இவரது மகள் ரவீனா, செங்கல்பட்டில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி மருத்துவம் பயின்று வருகிறார். இதனிடையே, வார விடுமுறைக்காக வழக்கம் போல ரவீனா கடந்த சனிக்கிழமை பொன்னேரியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று (திங்கள்கிழமை) தனது மகளை மீண்டும் கல்லூரியில் விடுவதற்காக தனது காரில் அழைத்துச் சென்றிருக்கிறார் ரவிக்குமார். அவருடன் அவரது மனைவி நிர்மலாவும் உடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, மகளை கல்லூரியில் விட்டுவிட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் சீமாவரம் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக எம்எல்ஏவின் கார் மோதியது.

இதில் ரவிக்குமாரும், மனைவி நிர்மலாவும் படுகாயமடைந்து உயிருக்கு போாடிக் கொண்டிருந்தவர்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர், ரவிக்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, படுகாயமடைந்துள்ள மனைவி நிர்மலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுநர் விடுப்பில் இருந்தததால் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் காரை இயக்கியதாக தெரிகிறது.

The post சென்னையில் விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
49469