உருளைக்கிழங்கு ரோல்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – அரை கிலோ
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
ரொட்டித்தூள் – கொஞ்சம் (பூரணம் தயாரிக்க)
டால்டா – தேவைக்கு (பூரணம் தயாரிக்க)
டால்டா – 200 கி (பொரித்தெடுக்க)
பீட்ரூட் – 1 பெரியது (துருவியது)
கேரட் – 100 கி.
பீன்ஸ் – 100 கி.
பட்டானி – 100 கி.
மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்
மைதா மாவு – 150 கி (கரைத்துக் கொள்ளவும்)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும், கேரட், பீன்ஸ், பட்டானி வேகவைத்து அதனுடன் துருவிய பீட்ரூட், உப்பு, மசாலாத் தூள், சேர்த்து வதக்கி, பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் டால்டா தொட்டு, சற்று கனமாகத் தட்டி, காய்கறிப் பூரணத்தை அதன் நடுவில் வைத்து மூடி அதை அப்படியே ரோல் செய்து கெட்டியாகக் கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து, ரொட்டித் தூளில் புரட்டி டால்டாவில் பொரித்தெடுக்க வேண்டும். இந்த உருளைக்கிழங்கு ரோல் உதிராமல் வர, ரொட்டித் தூளுடன் ஒரு டீஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கலக்கலாம்.