பேராசை எண்ணெய் நிறுவனங்களின் செயலால் ஏழைகளுக்கு பாதிப்பு: ஐநா

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பேராசையால் உலகெங்கும் ஏழை மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நெருக்கடியான உலக சூழலை பயன்படுத்தி எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை சற்றும் நியாயமற்ற வகையில் உயர்த்துவதாகவும், இதனால் உலகெங்கும் உள்ள ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். இதுபோன்று நிறுவனங்கள் சம்பாதிக்கும் அதீத லாபங்கள் மீது அரசுகள் கடுமையாக வரி விதிக்க வேண்டும் என்றும் ஆன்டனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டார்.

எக்ஸோ மூவல், செப்ரான், ஷெல், டோட்டல் போன்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் லாபம் ஓராண்டில் இரட்டிப்பாகி இருக்கும் நிலையிலும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையிலும் ஐ.நா. பொதுச்செயலாளரின் காட்டமான விமர்சனம் வெளியாகியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அபார லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த, கடந்த ஜூலை 1ல், கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகை லாப வரி விதிக்கப்பட்டது. அத்துடன் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கும் வரி விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.