தீவிரவாத தாக்குதலில் புதினுக்கு நெருக்கமானவரின் மகள் பலி!

உக்ரைன் தீவிரவாதிகள் ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கமானவரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்த தாக்குதல் மிஸ் ஆகி அவரது மகள் பலியாகியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற் குகடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் 6 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்துக்கொண்டே செல்கிறது. உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணிய ரஷ்யாவுக்கு உக்ரைன் கடும் சவால் அளித்து வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா வசம் வந்தாலும் போரில் உக்ரைன் அசராமல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த போர் நீடித்துக்கொண்டே செல்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் உள்பட பல்வேறு உதவிகள் அளித்து வருகின்றன. உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யாவை கண்டித்த மேற்கத்திய நாடுகள் அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. உணவு பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பு இருந்தாலும் இந்த போரின் தீவிரம் குறைந்தபாடில்லை. இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் இந்த மாத துவக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. உக்ரைன் ரஷ்யா போரால் உணவு தானிய ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருநாடுகளுக்கும் இடையேயான போர் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தாலும் போர் தொடர்ந்து கொண்டே உள்ளது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய அதிபர் புதினின் மூளையாக (முக்கிய ஆலோசனைகள் அளிப்பவர்) செயல்பட்டு வரும் அலெக்சாண்டர் டுகினின் மகள் டர்யா டுகின் கார் மீது குண்டு வீசித்தாக்கப்பட்டத்தில் அவர் உயிரிழந்துள்ளார். அலெக்சாண்டர் டுகினை கொல்ல வைக்கப்பட்ட குறியில் அவர் தப்பி மகள் கொல்ல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்கோ நகருக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது டர்யா டுகினின் கார் வெடித்துச் சிதறியது. இதில் அவர் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பான சிசிடிவி கேமிரா காட்சிகளும் வெளியானது. அதில், டர்யா டுகின் பயணித்த கார், தீயில் எரிந்து புகைகள் கிளம்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அலெக்சாண்டர் டுகினை கொல்ல வேண்டும் என்ற சதி திட்டம் தோல்வி அடைந்ததாகவும் அவரது மகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் உக்ரைனிய தீவிரவாதிகளின் செயல் இது என்று டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தலைவர் டெனிஸ் புஷிலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெனிஸ் புஷிலின் தனது டெலிகிராமில் பதிவில், “உக்ரைனிய ஆட்சியின் தீவிரவாதிகள் அலெக்சாண்டர் டுகினை அழிக்க முயற்சி செய்தனர். ஆனால், அவரது மகள் கார் வெடித்து சிதறியதில் கொல்லப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது சொகுசு காரில் டர்யா டுகின் திரும்பிக்கொண்டு இருந்த போதுதான் கார் வெடித்து சிதறியதுள்ளது. இந்தக் காரில் டர்யா டுகினின் தந்தை அலெக்சாண்டர் டுகின் பயணம் செய்ய இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் தனது திட்டத்தை மாற்றி வேறு காரில் சென்றுள்ளார். இதனால், அலெக்சாண்டரை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று பேசப்படுகிறது.