கொளுத்தும் வெயிலில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. குறிப்பா வெந்தயக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. ஒரேமாதிரி சமைக்காமல் இந்த மாதிரி வித்தியாசமாக பருப்பு சப்ஜி செய்து சாப்பிடலாமே..!
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1/2 கப்
வெந்தயக்கீரை – 2 கட்டு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேகவையுங்கள்.
* கீரையை சுத்தம் செய்யுங்கள்.
* பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.
* எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேருங்கள்.
* பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள்.
* அத்துடன் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேருங்கள்.
* சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கும்பொழுது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கிளறி இறக்குங்கள்.
* தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருப்பதுதான், ஸ்பெஷல்.