பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது வீட்டில் தோழிகளுடன் மதுபோதையில் ஆட்டம் போட்ட சர்ச்சை அடங்குவதற்குள் அவர் ஆபாச புகைப்பட சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.
34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்று உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த பிரதமர் சன்னா மரின், அண்மையில் தனது வீட்டில் தோழிகளுடன் மதுவிருந்தில் பங்கேற்று போதையில் ஆட்டம் போட்டார். அவர் போதை பொருட்களையும் பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் சன்னா மரின் பதவி விலக வேண்டும் என பின்லாந்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. சன்னாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில் அவரது வீட்டில் சன்னாவின் தோழிகள் இரண்டு பேர் மேலாடைகளை கழற்றி எறிந்த நிலையில், முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்றாலும் அதற்கு சன்னா மரின் மன்னிப்பு கோரியுள்ளார். பொதுவாழ்க்கையில் உள்ள உயர்ந்த பதவியில் இருக்கும் சன்னா மரின், கண்ணியம், பொதுவெளி நாகரீகம் பற்றி அறியாதவர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே சன்னா வெளியிட்ட தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இது குறித்து சன்னா மரின் கூறுகையில், அந்த புகைப்படம் ஒரு தனிப்பட்ட விருந்தின்போது என் வீட்டில் எடுக்கப்பட்டது. அது மாதிரியான புகைப்படத்தை எடுத்திருக்கக் கூடாது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.