நானும் ஒரு வக்கீல் தான், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன்: மம்தா பானர்ஜி

நானும் ஒரு வக்கீல் தான், பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ஐகோர்ட்டில் வாதாடுவேன் என மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தாவில் நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு கூறியதாவது:-

ஊடகம் வாயிலான விசாரணைகளை அனுமதிக்க வேண்டாம். நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். நானும் ஒரு வக்கீல் தான். மனித உரிமை வழக்கில் வாதாடி உள்ளேன். எந்த நேரத்திலும் ஐகோர்ட்டில் வாதாடுவேன். நீதித்துறையில் பெண்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊடக வாயிலான விசாரணைகள் சில சமயங்களில் தவறாக வழி நடத்தக்கூடும். மக்கள் எல்லாவற்றிலும் நம்பக்கதன்மையை இழக்கும் போது அவர்கள் நீதித்துறையை நாடுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கான தூண். நீதி பாரபட்சமாக இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.