மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!

மெக்சிகோ பல்கலை.யில் விவேகானந்தர் சிலையை பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார்.

பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பி்ர்லா தலைமயிலான பார்லி., குழு, நட்பு முறை பயணமாக லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோ சென்றுள்ளது. அங்குள்ள ஹிடால்கோ நகரில் மெக்சிகோ பல்கலை. வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர் சிலையை சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார். பின்னர் மெக்சிகோ நாட்டு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளிடையே பொருளாதாரம், வணிகம் மற்றும் கலாச்சாரம் குறித்து பேசினார்.

இது குறித்து ஓம்பிர்லா டுவிட்டரில் கூறிஉள்ளதாவது:-

சுவாமி விவேகானந்தரின் போதனைகள் எல்லை கடந்து செல்லும். இச் சிலை இளைஞர்களுக்கு உத்வேகத்தைத் தோற்றுவிக்கும். நான் இங்குத் சிலையை திறந்து வைப்பதை மிகவும் கௌரவமாக கருதுகிறேன். மனித குலத்திற்கான சுவாமி விவேகானந்தரின் செய்தி மற்றும் போதனைகள் மிக முக்கியமான ஒன்று. மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைப்பதன் மூலம், அவருக்கு எங்களது பணிவான அஞ்சலிகளை செலுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.