தேவையான பொருட்கள்:
காளான் – 300 கி
மிளகாய் வற்றல் – 8
மிளகு – கொஞ்சம்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – முக்கால் டீஸ்பூன்
வெங்காயம் – 75 கி
பூண்டு – 3 பல்
தேங்காய் – அரை மூடி (துருவியது)
எண்ணெய் – முக்கால் குழிக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும், காளானை நன்கு சுத்தப்படுத்தி அதனுடன், அரைத்தவற்றைக் கலந்து வைக்கவும், இதனுடன் மஞ்சள், உப்பு சேர்த்து இளம் தீயில் கலந்தவற்றை எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும், நன்கு வதங்கி வரும் போது கடைசியாக அதை இறக்கும் சமயத்தில் தேங்காய்த் துருவலைக் அரைத்து அதில் இட்டு ஒரு தரம் கிளறிய பின்பு உடனடியாக இறக்கிவிடவும், தேங்காய் சேர்த்த பின்பு அடுப்பின் மேல் அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம்.