வெங்காய அவியல்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் – 1
வாழைக்காய் – பாதி
காராமணி – 8
கொத்தவரங்காய் – 10
பூசணி – 1 துண்டு
கேரட் – 1 சிறியதாக

அரைக்க:-

பச்சைமிளகாய் – 3
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் (சிறிய அளவில்) – 6
தேங்காய்த் துருவல் – அரை கப்

தாளிக்க:-

கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:-

காய்கறிகளைக் கழுவி நீளவாக்கில் நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து வேகவிடுங்கள். தேங்காய்த் துருவலைத் தனியாக அரையுங்கள். காய்கறிகள் வெந்ததும் பச்சை மிளகாய், சீரகம், வெங்காயம் அரைத்து சேருங்கள். பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து உடனே இறக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கறிவேப்பிலை தாளித்து சேர்த்துக் கிளறி பரிமாறுங்கள். வித்தியாசமான சுவை தரும், இந்த வெங்காய அவியல்.