சீனாவில் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 715 அடி உயரமுள்ள இந்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து அங்கு பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் உள்ளது. 715 அடி உயரமுள்ள இந்த கட்டடம் 2000 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டடத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தினால் கட்டிடம் முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் வானளாவிய வளாகத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

அதே போல்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.