இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஜெனரல் அணில் சவுகான் நியமனம்!

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அணில் சவுகான் நியமனம் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறன்பட பணியாற்றிய அனுபவமிக்கவர் ஆவார். சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினென்ட் ஜெனரலாக ஒய்வு பெற்றவர் அணில் சவுகான் ஆவார்.

ராணுவத்தில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அணில் சவுகான் வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட பிரச்சைகளை சமாளித்தவர். நாட்டின் இரண்டாவது முப்படை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ விவகாரத்துறை செயலராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு தனித்தனியே தளபதிகள் உள்ளனர். இந்நிலையில் முப்படைகளையும் இணைத்து ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் முப்படை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது. இந்த பொறுப்பில் முதன் முதலாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார். இவர் 2019 டிசம்பர் 31 முதல் மூன்றாண்டுகள் வரை தொடர்ந்து பணி செய்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ல் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்தார். தற்போது 6 மாதங்களாக இந்த பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை. தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் முப்படை தலைமை தளபதி நியமனத்துக்கான விதியில் சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 62 வயது நிரம்பிய ஓய்வு அல்லது பணியில் உள்ள லெப்டினென்ட் ஜெனரல், ஏர் மார்ஷல், துணை அட்மிரல்கள் மட்டுமே முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்க தகுதி உடையவர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 ஸ்டார், 4 ஸ்டார் கொண்ட அதிகாரிகளும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர்.

அந்த வகையில் தான் தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் தலைமை தளபதி அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பொறுப்பில் உள்ளவர் முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்படுவார். நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு இவருக்கு உள்ளது. இதனால் தான் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். இந்தியாவில் முதன் முதலாக பிபின் ராவத் முப்படைகளில் தலைமை தளபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2வது நபராக அனில் சவுகான் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.