வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கானோருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர தமிழக அரசு வாய்ப்பு வழங்கவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு. முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தேர்தலுக்கு முன்பு அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, இந்தியாவில் சேவை செய்வதற்காக FMG தேர்வை எழுதி, தேர்ச்சிபெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, கடந்த ஜுலை மாதம், மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்டட அறிவிப்புக்கு இதுவரை அரசாரண வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல, திமுக-வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டு விடுவார்களோ?. இவ்வாறு டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.