வெள்ளை மாளிகை வன்முறை: டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன்!

அமெரிக்க வெள்ளை மாளிகை வன்முறை விவகாரத்தில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். அதிபர் தேர்தல் தோல்வியை தாங்காத முடியாத டாெனால்டு ட்ரம்ப், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வன்முறையை ஏற்படுத்தினார். அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில், இந்தக் கலவரம் நிகழ்ந்தது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் குறித்து ஜனவரி 6 என்ற கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெள்ளை மாளிகை வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு, ஜனவரி 6 கமிட்டி சம்மன் அனுப்பி உள்ளது. இதனை எதிர்த்து டொனால்டு ட்ரம்ப் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டொனால்டு ட்ரம்ப் நேரில் ஆஜராக மறுக்கும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி, நீதித் துறையின் மூலம் அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை வழங்கவும் முடியும் என்பதால், தொடர்ந்து பல்வேறு சட்ட சிக்கல்களை ட்ரம்ப் சந்திக்க நேரிடுவார் என கூறப்படுகிறது.