பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.
சென்னையில் மோடியின் தழிழகம் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று அண்ணாமலை பேசுகையில், மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. 10% இடஒதுக்கீடு தொடர்பாக திமுக தவறான பிரசாரம் செய்கிறது. ஏழை மக்களுக்கு உதவவே 10% இடஒதுக்கீடு. இதனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்டவர்களின் சலுகை பறிபோகாது என அண்ணாமலை கூறினார்.