பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பகுதியில் பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த, 317 பேரை சிங்கப்பூர் கடற்படையினர் மீட்டனர்.
நம் அண்டை நாடான இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல், தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பழுது அடைந்தது. அந்த கப்பலில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்த, தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கடற்படை விரைந்து சென்று அனைவரையும் மீட்டது.
இதுகுறித்து, சிங்கப்பூர் கடற்படை செய்தித் தொடர்பாளர் இண்டிகா டி சில்வா கூறியதாவது:-
பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நடுக்கடலில் கப்பல் பழுதடைந்து மூழ்கத் துவங்கியதாக அந்த கப்பலில் இருந்த ஒருவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சிங்கப்பூர் கடற்படை வீரர்கள் விரைந்து சென்று, மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 317 பேரை மீட்டனர். பின், அவர்கள் வேறொரு கப்பலில் வியட்நாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத பலர் சட்டவிரோதமாக கப்பல் மற்றும் படகுகளில் பல்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைகின்றனர். இவ்வாறு செல்லும்போது, இதுபோன்று நடுக்கடலில் சிக்கி தவிக்கின்றனர்.