இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை!

7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிளிண்டன், வினிஸ்டன், அயான், மரியான், தானி, ஆனஸ்ட், பேதுகை ஆகிய 7 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை விசைப்படகுகள் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 7 மீனவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இனிமேல் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அவர்களை விடுதலை செய்ததோடு, விசைப்படகு உரிமையாளர் மைக்கேல்ராஜ் உரிய ஆவணங்களுடன் ஜனவரி மாதம் 9-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஒரு வாரத்திற்குள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.