2001- 02 கல்வியாண்டு முதல் அரியர் தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைக்கழகம்!

2001-02 கல்வியாண்டிற்கு பிறகு எத்தனை அரியர்ஸ் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறக் கூடிய செமஸ்டர் தேர்வுகளின் போது மாணவர்கள் எழுதிக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

உரிய காலத்திலும் அரியர்சை எழுதி கிளியர் செய்யாமல்.. பட்டமும் பெற முடியாமல் ஏராளமான இளைஞர்கள் இருந்து வருகிறார்கள். இதுபோன்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் தான் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளது. அதாவது, கடந்த 2001-2002 ஆம் கல்வி ஆண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3-வது செமஸ்டருக்கு பிறகு அரியர் வைத்து இருந்தால் வரும் செமஸ்டர் தேர்வில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வரும் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்ககலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் www.coe1.annauniv.edu . என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லயோலா ICAM இன்ஜினியரிங் காலேஜ், விழுப்புரம் இன்ஜினியரிங் கல்லூரி, கோவை அண்ணா பல்கலைக்கழக கிளை , ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஜினியரிங் கல்லூரி, மதுரை அண்ணா பல்கலைக்கழக கிளை, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக கிளை, ஆரணி இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி என 9 பல்கலைக்கழகங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கட்டணத்தை டிடி மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம் என்றும், தேர்வு எழுத உள்ள பாடங்களை மாணவர்கள் விண்ணப்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளது. 2001-02 கல்வியாண்டிற்கு பிறகு எந்த ஆண்டில் அரியர் வைத்திருந்தாலும் தேர்வு எழுத சிறப்பு அனுமதியை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த சிறப்பு அனுமதி மூலம், அரியர்ஸ் இருப்பதால் பட்டம் பெற முடியாமல் தவித்த பல இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. படித்து முடித்த பிறகும் பட்டம் பெற முடியாததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு என பல வகைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி பட்டம் பெற வழி ஏற்பட்டுள்ளது. அரியர்ஸ் இருப்பதால் பட்டம் பெற முடியால் இருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அனுமதி பயனளிக்கும் என்று தெரிகிறது.