மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்தது. மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீக் (24) என்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விசாரணையை கர்நாடக காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனால் கடந்த இரு நாள்களுக்கு முன்பே வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் என்ஐஏ அமைப்பிடம் கர்நாடக காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
குக்கர் வெடிகுண்டை எடுத்துச் சென்ற அந்த நபர் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் (22) என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ஏற்கனவே இவரைத் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தேடி வருவதும் தெரியவந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதும் தெரிய வந்தது. அவரது டவர் லொக்கேஷன்களும் இதை உறுதி செய்தது. தமிழகம் வந்த ஷாரிக் கோவை, மதுரை, ஊட்டி உள்ளிட்ட ஊர்களில் தங்கி இருந்ததும் விசாரணையில் உறுதியானது. இந்தச் சூழலில் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக இப்போது என்ஐஏ அதிகாரிகள் மதுரையில் விசாரணை நடத்தினர். மதுரை டவுன் ஹால் ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தமிழ்நாடு முன்னதாக ஷாரிக் செல்போனை ஆய்வு செய்த கர்நாடக போலீசார், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரிடம் தொடர்ந்து போனில் பேசி உள்ளதைக் கண்டறிந்தனர். மேலும், கோவையில் தான் பொய்யான ஆவணங்களைக் கொடுத்து அவர் சிம் கார்டு வாங்கி உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக உதகையைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் தான் ஷாரிக்திற்கு சிம் கார்டு வாங்கி கொடுத்தாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.