துணிவு ட்ரெய்லருக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்!

அஜித்தின் துணிவு பட ட்ரெய்லர் வெளியாகி 24 மணிநேரத்திற்குள் அதற்கு 30 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு படம் ஜனவரி 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் துணிவு படத்தை பார்த்து ரசிக்க அஜித் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் தான் அஜித் குமார் ஆக்ஷனில் கலக்கிய ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்கள். துணிவு பட ட்ரெய்லரை பார்த்த அஜித் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. இருக்கு, சிறப்பான தரமான சம்பவம் இருக்கு என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் துணிவு பட ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள் அதற்கு 30 மில்லியனுக்கும் அதிகமாக வியூஸ் கிடைத்துள்ளது. இதை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் துணிவு பட தயாரிப்பாளரான போனி கபூர். அந்த ட்வீட்டை அஜித் ரசிகர்கள் லைக் செய்வதுடன், ரீட்வீட்டும் செய்து வருகிறார்கள்.