வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது!

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ’வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பணிகள் முடிவடையாததால் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த டிரைலரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

‘வாரிசு’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.