இன்று காலை வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தொல்காப்பிய பூங்கா ஊழியர்களுக்கு கரும்பும், புத்தாடையும் வழங்கி காலையிலேயே அவர்களை திக்குமுக்காட வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை நடைபயிற்சியின் போது பொதுமக்களுடன் உரையாடுவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என வெகுவாக கவனத்தை ஈர்த்து வருகிறார். கடுமையாக பனி கொட்டி வரும் சூழலிலும் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் நடைபயிற்சிக்கு புறப்பட்டு விடும் இவர், அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் பற்றியெல்லாம் தமது நலன் விரும்பிகளுடன் கலந்து ஆலோசித்து பேசுவார். இதனிடையே இன்று சென்னை அடையாறு தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாட்டில் பூங்கா ஊழியர்களுக்கு பொங்கல் திருநாள் புத்தாடையும், முழுக்கரும்பும் வழங்கினார்.
தொல்காப்பிய பூங்கா ஊழியர்களுக்கு சேலை, கரும்புடன் சேர்த்து கிப்ட் ஹேம்பர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. அதில் என்ன கொடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை. தொல்காப்பிய பூங்காவை பொறுத்தவரை கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கடந்த 2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.