நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் பகிர்ந்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக தடம் பதித்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவை பூர்விகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ், சினிமா குடும்பத்தை பின்புலமாக கொண்டவர். மலையாள தயாரிப்பாளரான சுரேஷ் குமார் மற்றும் தமிழ் நடிகை மேனகாவின் மகள்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ், ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களை காட்டிலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ளார். கடைசியாக தமிழில் செல்வராகவனுடன் இணைந்து சாணி காயிதம் படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது மாமன்னன், சைரேன் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நடிகை கீர்த்தி தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் ஓய்வை கழித்து வரும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். முதல் முறையாக நீச்சல் உடை அணிந்துள்ள கீர்த்தி சுரேஷ், நீச்சல் குளத்தில் குளித்தப்படியே பிரேக் பாஸ்ட் சாப்பிடும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதேபோல் மேக்ஸி உடை மற்றும் குட்டி டிரவுஸர் என அணிந்து தாய்லாந்து கடற்கரையின் அழகை ரசிக்கும் போட்டோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் கோ சமுய் தீவிற்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் சன் செட்டை ரசித்த காட்சிகளையும் போட்டோவாக வெளியிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த நீச்சல் குள போட்டோக்களும் பீச் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.