ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு: 5 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தியாவில் பல மாநிலங்களில் ஒருகாலத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதங்கள் மூலம் செல்வாக்கு செலுத்தி வந்தனர். மாவோயிஸ்டுகளின் பிரதான கேடயமாக பழங்குடி மக்கள்தான் இருந்து வந்தனர். ஆனால் மாவோயிஸ்டுகளின் புகலிடமாக இருந்த மலைப்பகுதிகள், பழங்குடி வாழ்விடங்களுக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் சென்று சேர்ந்தன. இதனால் இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டமே பெருமளவு குறைந்துவிட்டது. மாவோயிஸ்டுகள் பெருமளவு ஒடுக்கப்பட்டுவிட்டனர். ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களின் மலைகளில்தான் தற்போது மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா மாவட்டத்தில் இன்று சிஆர்பிஎப் வீரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சரமாரி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த மோதலின் போது சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.