ராகுலுடன் ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற முன்னாள் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயராம் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.
மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளராக இருந்தவர் அரவிந்த் மாயராம். தற்போது ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் பொருளாதார ஆலோசகராக இருக்கிறார். இவர் சமீபத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கலந்துகொண்டார். இதையடுத்து, அவர் மீதான பழைய புகார் ஒன்றை மத்திய புலனாய்வுத் துறை தூசி தட்டி எடுத்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், அரவிந்த் மாயராம் நிதித்துறை செயலராக இருந்த போது, கடந்த 2004ம் ஆண்டில் இந்தியன் வங்கிக்கு அச்சிட்ட ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் கலர் இங்க் வினியோகிக்கும் ஒப்பந்தத்தை இங்கிலாந்தைச் சேரந்த டி லா ரூ இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு கடந்த 2015ம் ஆண்டு வரை 4 முறை நீட்டித்ததாக மாயராம், இங்கிலாந்து நிறுவன அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.