டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் விசாவிற்காக பாலியல் ஆசைகளை நிறைவேற்ற கேட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தான் செல்ல பாகிஸ்தானிய விசாவிற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார். 2022ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த பெண் தூதரகத்துக்கு சென்ற போது அங்கு உள்ள ஊழியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்து உள்ளார். இது குறித்து அந்த பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
பாகிஸ்தான் தூதரகத்தில் விசா மறுக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேறும் போது, என்னை ஆசிப் என்று அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி உதவ முன்வந்தார். என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விசா அதிகாரி வரும் வரை காத்திருக்கச் சொன்னார்கள். அப்போதுதான் ஆசிப் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தன்னோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தினார். மேலும் பிரதமர் மோடி குறித்தும், காஷ்மீர் பற்றியும், இந்தியாவுக்கு எதிராகவும் எனது பேஸ்புக்கில் பதிவிடும்படி கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அவர் புகாா் தெரிவித்து உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.