எம்.ஜி.ஆரின் படத்தை தன் மார்பில் டாட்டூவாக போட்டுக்கொண்ட விஷால்!

நடிகர் விஷால் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் படத்தை தன் மார்பில் டாட்டூவாக போட்டுள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான ‘லத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஷால் பிரபல நடிகரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் படத்தை தன் மார்பில் டாட்டூவாக போட்டுள்ளார். எம்.ஜி.ஆரின் டாட்டூ இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஷால் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டாட்டூ உண்மையானதா? அல்லது படத்திற்காக வரையப்பட்டாதா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.