புதிய தலைமை செயலகம் திறப்பு: மு.க. ஸ்டாலினுக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு!

தெலங்கானாவில் புதிதாக தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிப்ரவரி 17 ல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு, சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் 3வது அணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகிறார். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு திடீரென்று அழைப்பு விடுத்துள்ளார். தெலங்கானாவில் புதிதாக தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிப்ரவரி 17 ல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்க வரும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு, சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அன்றைய தினம் செகந்திராபாத்தில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திலும் பங்கேற்கும்படி சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சந்திரசேகர ராவின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 17 ல் தெலங்கானா செல்லலாம் எனவும், தலைமை செயலக திறப்பு விழா மட்டுமின்றி பொதுக்கூட்டத்திலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கலாம் எனவும் கூறப்படுகிறது.