ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றியவர் சிபி ராதாகிருஷ்ணன். கோவை பாஜகவின் முகமாக இருந்தவர். மத்திய அரசின் அகில இந்திய கயிறு வாரிய தலைவராக உள்ளார். தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம் 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி திரவுமுர்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே தெலுங்கானா-புதுச்சேரி ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டனர். தற்போது மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், நாகாலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த கோஷ்யாரி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு ஜார்க்கண்ட் ஆளுநரான ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டின் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். லெப். ஜெனரல் திரிவிக்ரம் பிரனாய்க், அருணாச்சல பிரதேச ஆளுநராகவும், அஸ்ஸாம் ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா, இமாச்சல பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த அர்லேகர், பீகார் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக இருந்த சவுகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர், ஆந்திரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.