யோகி பாபுவுக்கு கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி பரிசு அளித்துள்ளார்!

நடிகர் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி பரிசு அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. 2009ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான யோகி பாபு தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள யோகி பாபு பின்னர் கவனத்தை பெறும் கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சந்தானம் என பல நடிகர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். வாரிசு படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார் யோகி பாபு. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் பொம்மை நாயகி படம் வெளியானது.
மேலும் தி கிரேட் இந்தியன் கிச்சன், மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் யோகி பாபு. மேலும் பூமர் அங்கிள், மெடிக்கல் மிராக்கிள், ஜெயிலர், உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார்

இந்நிலையில் நடிகர் யோகி பாபு தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் கையில் பேட்டுடன் உள்ளார் யோகி பாபு. அந்த பேட்டை கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி யோகி பாபுவுக்கு பரிசாக வழங்கியுள்ளார். பேட்டுடன் பேசியிருக்கும் யோகி பாபு அந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் “எம்.எஸ்.தோனி கைகளில் இருந்தும் அவர் விளையாடிய நெட்டில் இருந்தும் நேரடியாக இந்த பேட் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பேட்டை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி தோனி சார். உங்கள் கிரிக்கெட் நினைவுகளைப் போல சினிமாவில் நீங்கள் கால்பதித்திருக்கும் இந்த நினைவுகளையும் எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்” என்று பதிவிட்டுள்ளார். சாக்‌ஷி தோனியையும் டேக் செய்துள்ளார்.

கிரிக்கெட் வீரரான எம்எஸ் தோனி, Lets get married என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.