காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.