அமெரிக்காவின் ட்ரோன் மீது ரஷ்யாவின் போர் விமானம் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்து உள்ளது. கருங்கடலில் ஏற்பட்ட மோதலில் அமெரிக்காவின் போர் விமானம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
பல்வேறு நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. ரஷ்யா இதன் இன்னொரு எல்லையில் உள்ளது. இந்த கருங்கடலில் யாருக்கு ஆதிக்கம் அதிகம் என்பதில் ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் கடல் எல்லையில் கடற்படை தளங்களையும் அமைத்து உள்ளது.
அமெரிக்கா இதன் எல்லையில் இல்லை என்றாலும், ரஷ்யாவிடம் வம்பு இழுத்து மற்ற நாடுகளை காவல் காப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்கா இங்கே ரோந்து பணிகளை செய்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக நவீன ஆயுதங்கள் பொருத்திய ட்ரோன்கள் மூலம் இங்கே ரஷ்யா பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு கருங்கடலில் ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ட்ரோன் மீது ரஷ்யாவின் போர் விமானம் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்து உள்ளது. கருங்கடலில் ஏற்பட்ட மோதலில் அமெரிக்காவின் போர் விமானம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
ட்ரோனை அதிவேகத்தில் மோதி ரஷ்ய விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக கருங்கடலில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் MQ-9 Reaper எனப்படும் தாக்குதல் திறன் கொண்ட ட்ரோன் மீதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் இரண்டு சுகோய் 27 விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பாக இரண்டு விமானங்களும் அந்த ட்ரோனை நெருக்கமாக சுற்றி வந்துள்ளன. அதன்பின் மேலே இருந்து ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி உள்ளன. கடைசியில் வேகமாக வந்து அந்த ட்ரோனை மோதி தாக்கி உள்ளன. இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கருங்கக்கடலில் அமெரிக்காவின் ரோந்து பணிகளை ரஷ்யா தடுப்பது இது முதல்முறை அல்ல. ஆனாலும் இந்த முறை ரஷ்யா கையாண்டு இருக்கும் விதம் பரபரப்பை கூட்டி உள்ளது. இந்த மோதல் வரும் நாட்களில் தீவிரம் அடையாளம். உரிய பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றால் நிலைமை கைமீறி போகலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ராஜாங்க பேச்சுவார்த்தை மட்டுமே இதற்கு தீர்வாக இருக்க முடியும் என்று அமெரிக்க தரப்பு தெரிவித்து உள்ளன.