தென் மேற்கு ஜப்பான் மற்றும் கிழக்கு தைவான் இடையே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், யோனாகுனி நகரிலிருந்து தென் மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிழக்கு தைவானுக்கும் தென்மேற்கு ஜப்பானுக்கும் இடையே வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. அதேபோல் தைபேயில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தைவானில் இருந்து கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவிலும் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
இந்த நிலநடுக்கம் தரைபரப்பில் 27 கிலோ மீட்டர் ( 17 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 6.1 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாகவும் தைவானின் மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 6.3 ரிக்டர் அளவாக பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த நிலநடுக்கம் கடற்பரப்பில் இருந்து 20 கிலோ மீட்டர்கள் (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும், கடல் சீற்றம் இருக்கலாம் ஆனால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.