மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகிற ஏப். 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிந்து நேரில்ஆஜராக சம்மன் அனுப்பியது. பிப்.26-ம்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பின் மார்ச் 9-ம் தேதி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது நீதிமன்ற காவல் இரு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று ஆஜரானார்.அவரது நீதிமன்ற காவலை ஏப். 3-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி நாக்பால் உத்தரவிட்டார்.

இதற்கிடையே மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த பண மோசடி வழக்கில் அமலாக்க துறை அதிகாரிகள் மணீஷ் சிசோடியாவை ரோஸ் அவென்யூ கோர்ட்டில் இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ம் தேதிவரை அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு மீது நாளை (மார்ச்.21-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.