பாஜக மாநில நிர்வாகி பொன்.கந்தசாமி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப சில நாட்களாக பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இது அதிமுக – பாஜக கூட்டணியிலும் உரசலை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என உறுதிப்படுத்திய நிலையில் தற்போது பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.
பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பொன்.கந்தசாமி, அக்கட்சியில் இருந்து விலகி நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சில நாட்களாக பாஜகவில் இருந்து முக்கிய தலைகள் யாரும் விலகாமல் இருந்து வந்த சூழலில், மாநில நிர்வாகி ஒருவர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். பாஜக மாநிலப் பொறுப்பில் உள்ளவரை ஈபிஎஸ் தட்டித் தூக்கியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.