ராஷ்மிகா மந்தனா இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்!

முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.சலோ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகாவுக்கு முதல் படம் பெரிய வரவேற்பை அளிக்கவில்லை. அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. அதில் இடம்பெற்ற இன்கெம் இன்கெம் காவலே பாடலில் அவர் கொடுத்த எக்ஸ்பிரெஷன்ஸை பார்த்த பலரும் ராஷ்மிகாவின் நடிப்புக்கு கட்டுண்டனர். அதுமட்டுமின்றி அந்தப் பாடலின் மூலமும், அந்தப் படத்தில் அவர் காட்டும் ஒவ்வொரு எக்ஸ்பிரெஷன் மூலமும் அவருக்குள் மிகச்சிறந்த நடிகை இருக்கிறார் என தெரிந்துகொண்டது தெலுங்கு திரையுலகம். அந்தப் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவின் மீதான க்ரஷ் ரசிகர்களுக்கு ஏறிக்கொண்டது. ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை மெருகேற்றிக்கொண்டே சென்றார் ராஷ்மிகா. அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகளவு குவிந்தன.

தெலுங்கில் வெற்றிகொடி நாட்டிய ராஷ்மிகா தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். முதல் படம் தோல்வியையே சந்தித்தது. எனவே தமிழில் அவருக்கு இனி வாய்ப்புகள் கிடைக்காது என்றே ஆரூடம் கூறப்பட்டது. ஆனால் அந்த ஆரூடத்தை அடித்து நொறுக்கும் விதமாக விஜய் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. வாரிசு படத்தில் நடித்த அவரது எக்ஸ்பிரெஷன்களை ரசிகர்கள் மீண்டும் ரசித்தனர். ராஷ்மிகா மந்தனா இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடனம் ஆடும் வெகு சிலரில் விஜய்யும் ஒருவர். அவருக்கு ஈடுகொடுத்து ஆடும் வெகு சில ஹீரோயின்களில் சிம்ரனுக்கு அடுத்து யாரும் இல்லை. ராஷ்மிகா வாரிசில் தோன்றும்வரை அப்படித்தான் இருந்தது. ஆனால் வாரிசு படத்தின் பாடல்களில் விஜய்யுடன் ராஷ்மிகா ஆடும்போது சிம்ரன் வரிசையில் அவர் இணைந்துவிட்டார் என்பதே உண்மை. இந்நிலையில் இன்று அவர் கொண்டாடுகிறார். பிறந்தநாள் வாழ்த்துகள் ராஷ்மிகா மந்தனா!