விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’. இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளார்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த புகார் மனுவில், “மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக் கூடம்’ திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர் இந்த மனுவுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளார்.